ADDED : ஜன 23, 2026 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஸ்ரீ ராம் பைனான்ஸ்' நிறுவனத்தின், 'உன்னதி' என்ற பிக்சட் டிபாசிட் திட்டத்துக்கு, 'ஏஏஏ, ஸ்டேபிள்' என்ற மதிப்பீட்டை, தர ஆய்வு நிறுவனமான, 'கேர் ரேட்டிங்ஸ்' வழங்கிஉள்ளது.
ஸ்ரீராம் பைனான்ஸ் தெரிவித்துள்ளதாவது:
ஜப்பானின் முன்னணி நிதி நிறுவனமான, 'எம்.யு.எப்.ஜி.,' என்ற நிறுவனம் செய்துள்ள முதலீடு மற்றும் நிறுவனத்தின் வலுவான நிதி மேலாண்மை காரணமாக இந்த ரேட்டிங் கிடைத்துள்ளது.
நிறுவனத்தின் கடன் பத்திரங்களுக்கும், 'கிரிசில் மற்றும் இக்ரா' ஆகிய நிறுவனங்கள் சாதகமான மதிப்பீடுகளை வழங்கியுள்ளன.
எங்கள் நிறுவனம் 2.81 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

