ADDED : நவ 16, 2025 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச் சந்தைகளில், கடந்த வெள்ளியன்று அன்னிய முதலீட்டாளர்கள், 2,298 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். அன்னிய முதலீடுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், வரும் நாட்களில் மீள்வதற்கான அறிகுறிகள் தெரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பண்டிகை காலங்களில், இந்திய பங்குச் சந்தைகளில் அதிக விற்பனை இருந்தாலும், நிறுவனங்களின் சாதகமான காலாண்டு நிதிநிலை அறிக்கைகள், இந்தியா -- அமெரிக்கா இடையேயான பேச்சுகளில் முன்னேற்றம், விதிமுறைகளை செபி எளிமையாக்கி வருவது போன்றவையே இதற்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

