UPDATED : அக் 12, 2026 02:08 AM
ADDED : அக் 11, 2026 10:24 PM

அக்டோபர் மாதத்தில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் 44,166 கோடி ரூபாய்க்கு இந்திய பங்குகளை விற்றுள்ளதாக என்.எஸ்.டி.எல்., தரவுகள் கூறுகின்றன.
மேலும், நடப்பு ஆண்டில் இதுவரை 3.04 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றுள்ளனர். அமெரிக்க கடன் பத்திரங்களில் வருமானம் உயர்வு, டாலர் மதிப்பு வலுவடைதல், அதிக கச்சா எண்ணெய் விலை ஆகிய காரணங்களால் அன்னிய முதலீடுகள் கணிசமாக வெளியேறியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தவிர, ஏ.ஐ., பங்குகளுக்கு டிமாண்டு அதிகரித்ததால், வட ஆசிய சந்தைகளில் அன்னிய முதலீடுகள் குவிந்திருக்கின்றன.
மேலும், அமெரிக்க பத்திரங்களில் ரிஸ்க் இல்லாமலேயே 5.20 சதவீத வருமானம் கிடைப்பதாலும், அன்னிய முதலீடுகள் இந்தியாவில் இருந்து வெளியேறி அமெரிக்க பத்திர சந்தைக்குள் நுழைவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

