இந்த வாரம் எப்படி இருக்கும் ? நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும் 22,492
இந்த வாரம் எப்படி இருக்கும் ? நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும் 22,492
UPDATED : அக் 12, 2026 02:11 AM
ADDED : அக் 11, 2026 10:24 PM

அப்பு: வணக்கம் டவுனு, நியுட்ரன். கோவிலுக்கு போயிருந்தேன். லேட்டாயிடுச்சு. வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா.
நியுட்ரன்: நாங்க வந்து 10 நிமிஷம் இருக்கும். டவுனு திருநெல்வேலி அல்வா கொண்டுவந்தாரு. அதை சாப்பிட்டுட்டு இருக்கோம்.
அப்பு: சந்தையை இறக்கிவிட்டுட்டு அல்வா வேற கொண்டுவந்துட்டாரா.
டவுனு: அட நீங்க வேற. திருநெல்வேலி நண்பர் ஒருத்தர் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தாரு. அவரு கொண்டுவந்த அல்வாவை உங்களோட பகிர்ந்துகிட்டேன்.
நியுட்ரன்: அது ஏங்க டவுனு இரண்டு நாள் அந்த காட்டு கட்டுனீங்க.
அப்பு: ஏன் மீதமிருக்கிற மூணு நாள் நாங்க காட்டுன காட்ட ஏன்னு கேட்க மாட்டீங்களோ!
நியுட்ரன்: உங்க ரெண்டு பேரால எனக்கு எவ்வளவு பிரச்னை தெரியுமா? வியாபாரம் பண்ணவே முடியலை. வாரக்கடைசியில கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தா வாரத்தோட ஓப்பனிங்கிற்கும், குளோசிங்கிற்கும் இடையே வெறும் 10 புள்ளி தான் வித்தியாசம். வாராந்திர ரீதியா என்னோட கையில சந்தை இருந்தா மாதிரியும் நான் வெட்டியா வேடிக்கை பார்த்த மாதிரியும் இருக்குது. இப்படியே போனா வரலாறு என்னை பத்தி தப்பால்ல பதிவு பண்ணும்.
டவுனு: இடையிலேயே வாராந்திர ஸ்விங் 596 புள்ளிகள் இருந்துச்சுங்கறதையும் வரலாற்றுல பதிஞ்சு விட்டுட வேண்டியது தானே.
நியுட்ரன்: வர்ற வாரத்துல பணவீக்க விகிதம், மொத்த விலை விற்பனை குறியீட்டின் அடைப்படையிலான பணவீக்கம், வேலையின்மை விகிதம், பயணியர் வாகன விற்பனை, பேலன்ஸ் ஆப் டிரேட், அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது. வீடு விற்பனை, பணவீக்க விகிதம், உற்பத்தி நிறுவனங்களின் விலை குறியீடு, சில்லரை விற்பனை, தொழில்துறை உற்பத்தி போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்கின்றன.
டவுனு: போர் குறித்த தகவல்கள், உலக செய்திகளின் மேலே அதிக கவனம் வைக்கணும்.
நியுட்ரன்: நிப்டிக்கு 22,208/21,896/21,668 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 22,804/23,088/23,316 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 22,492 தான் வாராந்திர அளவுல மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும்.
டவுனு: வர்ற வாரம் எப்படி இருக்கும் நியுட்ரன்?
நியுட்ரன்: இந்த வாரம் நான் சொல்ல மாட்டேன். கொஞ்ச நாளா கணிப்பு சரியா இருக்கறதால லீவு விட்டுட்டேன்.
அப்பு: இந்த வாரம் பேச்சு இல்லை. கணிப்பை இரகசியமா வச்சுகிட்டு வீச்சுதானா நியுட்ரன்.
டவுனு: யாரு. நியுட்ரன் வியாபாரம் பண்ணப்போறாரு. ஏதாவது நம்பற மாதிரி சொல்லுங்க அப்பு.
அப்பு: என்னடா இப்படி இறங்குதேன்னு நானும் கொஞ்சம் தீவிரமா அனலைஸ் பண்ணுனேன். பொதுவா நிப்டி பலவீனமாத்தான் இருக்குது. 2026 முழுதுமே கிட்டத்தட்ட இந்த நிலைமை தான். ஒரே ஒரு ஆறுதலான விஷயம் சட்டுன்னு அப்பப்போ ரெக்கவரி வந்துடறதுதான். இதையெல்லாம் வச்சு பார்த்தா சின்ன ரெக்கவரி வரலாம். ஆனா தொடருமாங்குறது டவுட்டா இருக்குது.
டவுனு: நீங்களே இப்படி சொல்றது ஆச்சரியமா இருக்குது. ஆனாலும் டேட்டாவை வச்சு நீங்க சொல்றீங்கன்னு தெரியுது. கடந்த 22 நாட்களில் நிப்டியில இருக்கற 43 பங்குகளும், 5 நாட்களிலே 28 பங்குகளும் இறக்கத்தை சந்திச்சுருக்கு. 5 மற்றும் 22 நாட்கள் என்ற இரண்டு அளவீட்டில பார்த்தா ஆறு பங்குகள் மட்டும் தான் ஏற்றத்தை சந்திச்சுருக்கு. ரெக்கவரி வந்தாலும் அது பரந்துபட்டு வரலைங்குறதை இது காண்பிக்குது.
நியுட்ரன்: சந்தையில இறக்கம் வந்தா தான் பழைய டேட்டாக்களை வச்சு அலசி ஆராயறீங்க. சரி வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு உங்க கணிப்பை சொல்லுங்க டவுனு.
டவுனு: வாலட்டைலிட்டி கொஞ்சம் குறையலாம். ஆனா ஏற்றத்துக்கான வாய்ப்பு பாதிக்கு பாதிதான் இருக்குது.
அப்பு: நியுட்ரன் மாதிரி நிலைமை எனக்கு வந்துடும் போல இருக்குது. வாய்ப்பே கிடைக்காதோ!
நியுட்ரன்: கொஞ்ச நாளைக்கு தான் அப்பு. கவலைப்படாதீங்க.
டவுனு: எவ்வளவோ தாண்டீட்டோம். இதை தாண்ட மாட்டோமான்னு சொல்லீட்டு போயிட்டே இருக்கணும் அப்பு.
நியுட்ரன்: கரெக்டா சொன்னீங்க டவுனு.
டவுனு: அப்பு பில்டிங் கட்டுறதுல உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கு. நண்பர் ஒருத்தரு பில்டிங் கட்டீட்டு இருக்காரு. அப்ரூவல் எல்லாம் வாங்குன பின்னாடி இரண்டாவது மாடி கட்டலாமா கூடாதான்னு ஒரே கன்ப்யூஷன்ல இருக்காரு. நாம மூணு பேரும் போயி பில்டிங்கை பார்த்து ஒரு ஐடியா கொடுத்துட்டு அங்கே ஒரு பேமஸான காபி ஷாப் இருக்குது. அங்க காபி சாப்பிடலாம் என்று சொல்ல மூவரும் டவுனுடைய காரில் ஏறி கிளம்பினர்.
