பங்குகளை விட கடன் பத்திரங்களுக்கு அன்னிய முதலீட்டாளர்கள் முன்னுரிமை எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தகவல்
பங்குகளை விட கடன் பத்திரங்களுக்கு அன்னிய முதலீட்டாளர்கள் முன்னுரிமை எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தகவல்
ADDED : நவ 18, 2025 12:35 AM

க டந்த ஓராண்டில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், அதிக ஏற்ற, இறக்கங்கள் கொண்ட பங்குகளை விட, நிலையான வருமானம் தரும் கடன் பத்திரங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பதாக, எஸ்.பி.ஐ., அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச் மாதம், மொத்த அன்னிய முதலீடு 33,836 கோடி ரூபாயாக இருந்தது. இதில், கடன் பத்திரங்கள் முதலீடு மட்டும் 29,392 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த ஏப்ரலில், 20,548 கோடி ரூபாய், ஜூனில் 7,955 கோடி ரூபாய் என முதலீட்டை திரும்ப பெற்ற போதும், கடன் பத்திரங்களில் அவர்கள் மேற்கொண்ட முதலீடு, ஒட்டுமொத்த தாக்கத்தை சற்று குறை த்தது.
இந்தாண்டில் இதுவரை அதிகபட்சமாக அக்டோபரில், 35,473 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்துள்ளன. இதில், பங்குகளில், 14,573 கோடி ரூபாயும், கடன் பத்திரங்களில் 15,074 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

