ADDED : அக் 03, 2025 11:49 PM

அமெரிக்கா -- இந்தியா வர்த்தகப் பதற்றங்கள், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் போன்றவற்றால் இந்திய ரூபாய் மதிப்பு குறைவாக இருந்தாலும், வங்கியின் ரூபாயின் உலகளாவிய பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் சில முக்கிய நடவடிக்கைகள் ஆதரவாக இருக்கின்றன.
இந்திய வங்கிகள் இனி பூடான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு, வர்த்தகத்திற்காக ரூபாய் அடிப்படையிலான கடன்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலரைச் சார்ந்து இருப்பதை குறைக்கும் வகையில், இந்தோனே � ய ரூபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திரம் உட்பட பல கரன்சிகளுக்கான அதிகாரப்பூர்வ எக்சேஞ்ச் ரேட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளில் உள்ள உபரி இருப்புத் தொகையை இப்போது அரசுப் பத்திரங்களைத் தவிர, கார்ப்பரேட் பாண்டுகள் கமர்ஷியல் பேப்பர்கள் ஆகியவற்றிலும் முதலீடு செய்யலாம்.
இந்த நடவடிக்கைகள் ரூபாயின் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுப்பதுடன், பிராந்திய வர்த்தகத்தில், டாலரின் ஆதிக்கத்தை படிப்படியாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலரின் பலவீனம், ரிசர்வ் வங்கி-யின் ஆதரவான நடவடிக்கைகள் மற்றும் அமைதியான உள்நாட்டுச் சூழல் ஆகியவற்றால், ரூபாயின் போக்கு சாதகமாக உள்ளது.
எதிர்ப்பு நிலை: ரூபாய் 89.00 - 89.20 என்ற அளவில் இருக்கலாம்
ஆதரவு நிலை: 88.40 - 88.50 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
அதிவேக உயர்வுக்கு அறிகுறி: ரூபாய் 88.20-க்குக் கீழே சரிந்தால், அது, அதன் மதிப்பு உயரும் போக்கின் முதல் உண்மையான அறிகுறியாக இருக்கும்.
சந்தையில் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக, வர்த்தகம் அல்லது வரி தொடர்பான பிரச்சினைகளில் சிறிய உலகளாவிய முன்னேற்றம் கூட ரூபாயின் மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித் பபாரி,
நிர்வாக இயக்குநர், சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்