ADDED : செப் 27, 2025 12:58 AM

ரூபாய் அமைதியடைந்த நேரத்தில், மற்றொரு புயல் உருவானது. இந்த முறை, டிரம்பின் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்து பொருட்கள் இறக்குமதியின் மீது, 100 சதவீத வரி விதிக்கும் அறிவிப்பின் வடிவில்.
சுங்க வரி செய்தி போதாதென்று, அமெரிக்கப் பொருளாதாரத்தின் புதிய தரவுகள், மேலும் அழுத்தத்தைச் சேர்த்துள்ளன. வேலை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி போன்ற பல தரவுகள் எதிர்பார்ப்புகளை விட அதிகரித்துள்ளது.
இதனால் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை விரைவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை குறைத்துள்ளன. மேலும் டாலர் வேகம் பெற்றது, டாலர் குறியீடு 98.45க்கு அருகில் ஏறியது ஆகியவை ரூபாய்க்கு பாதிப்பை ஏற்படுத்தின.
இருப்பினும், உள்நாட்டு காரணிகள் சாதகமாக இருப்பது ஆறுதலாக உள்ளது. உலகளாவிய தரவுகள் மற்றும் சுங்க வரிகள் டாலரை உயர்த்துவதால், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 89.00-89.20-ல் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.
அதே சமயம், 88.40க்கு அருகில் ஆதரவு உள்ளது. மருந்து சுங்க வரி அதிர்ச்சி குறுகிய காலத்தில் உணர்வை நிலையற்றதாக வைத்திருக்கலாம்.
இருப்பினும், வர்த்தகப் பேச்சுக்களில் திருப்புமுனை ஏற்பட்டால், ரூபாய் ஒரு மீட்சியை பெறலாம், அதன் சமீபத்திய இழப்புகளில் சிலவற்றைத் திரும்பப் பெறவும் உதவலாம்.
அமித் பபாரி,
நிர்வாக இயக்குநர்,
சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்