UPDATED : டிச 13, 2025 06:26 AM
ADDED : டிச 13, 2025 02:38 AM

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இதுவரை இல்லாத வீழ்ச்சியை நேற்று சந்தித்தது. வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சு குறித்த கவலைகள் காரணமாக, ரூபாய் மதிப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக அழுத்தத்திலேயே உள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை குறைத்ததோடு மட்டுமல்லாமல், மாதத்திற்கு 40 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கடன் பத்திரங்களை மீண்டும் வாங்க துவங்கியுள்ளது.
இது, சந்தையில் டாலர் வினியோகத்தை அதிகரித்தாலும், பலவீனப்படுத்தும். பொதுவாக, டாலர் பலவீனமடைந்தால், ரூபாய் உட்பட மற்ற நாணயங்களுக்கு ஆதரவு கிடைக்கும். அமெரிக்காவில், வேலையின்மை கிட்டதட்ட நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சென்றுள்ளதும், டாலரை பலவீனப்படுத்தியுள்ளது.
![]() |
மெக்சிகோவுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 5.63 பில்லியன் டாலர் மட்டுமே என்றாலும், அந்நாட்டின் வரி உயர்வு அறிவிப்பு, அதிக கவனம் செலுத்தப்படும் துறைகளை நேரடியாகப் பாதிக்கும். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடி, இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார்.
இது, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்றங்களுக்கான கதவைத் திறந்து, நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
சந்தையின் போக்கு மற்றும் லிக்விடிட்டியை பொறுத்து, ரூபாய் மதிப்பு 89.70 - 90.70 என்ற வரம்பிற்குள் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படு கிறது.


