மலிவு விலையில் காப்பீடு ஆய்வு செய்யும் நிறுவனங்கள்
மலிவு விலையில் காப்பீடு ஆய்வு செய்யும் நிறுவனங்கள்
ADDED : டிச 13, 2025 02:10 AM

செலவுகளைக் குறைத்து, மலிவு விலையில் சிறப்பான காப்பீட்டுத் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது குறித்து ஆராய, ஒன்பது பேர் கொண்ட குழுவை காப்பீட்டு நிறுவனங்கள் அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவில், ஆயுள் மற்றும் பொது காப்பீட்டுத் துறையில் உள்ள மூத்த நிர்வாகிகள் மற்றும் வினியோகஸ்தர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை ஆணையம், காப்பீடுகளுக்கான செலவுகளைக் குறைக்குமாறு நிறுவனங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், கமிஷனை பிரித்து வழங்குவது குறித்து தற்போது விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.
உதாரணத்துக்கு, பாலிசி எடுத்தஉடனேயே முதல் ஆண்டில் முகவருக்கு 40 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது என்றால், அதை ஒரே முறையாக கொடுக்காமல், பாலிசியின் ஆரம்ப ஆண்டுகளில் பிரித்து கொடுக்கப்படுவது குறித்து ஆராயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

