மருத்துவ காப்பீடு சிறுநகரங்களில் அதிகரிக்கும் ஆர்வம்
மருத்துவ காப்பீடு சிறுநகரங்களில் அதிகரிக்கும் ஆர்வம்
ADDED : டிச 13, 2025 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் மருத்துவ காப்பீடு வாங்கியவர்களில், 10 வாடிக்கையாளர்களில் ஆறு பேர், சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் மருத்துவக் காப்பீட்டின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த மருத்துவக் காப்பீட்டில் 62 சதவீத பாலிசிகளை இந்நகரங்களைச் சேர்ந்தவர்களே வாங்கிஉள்ளதாக 'பாலிசி பஜார்' நிறுவன புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள், பெரும்பாலும் 10 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான பாலிசிகளை வாங்கியுள்ளனர் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

