தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபோரக்ஸ்: சரிவில் இருந்து ரூபாயை மீட்ட ரிசர்வ் வங்கி

ஃபோரக்ஸ்: சரிவில் இருந்து ரூபாயை மீட்ட ரிசர்வ் வங்கி

ஃபோரக்ஸ்: சரிவில் இருந்து ரூபாயை மீட்ட ரிசர்வ் வங்கி


UPDATED : டிச 18, 2025 01:39 AM

ADDED : டிச 18, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2025 01:39 AM ADDED : டிச 18, 2025 01:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர் சரிவில் உள்ள ரூபாய் மதிப்பு, நேற்று எதிர்பாராத விதமாக வலுவடைந்து மீண்டு வந்துள்ளது.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதை தடுக்க, ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலர்களை விற்பனை செய்ததே இந்த மீட்சிக்கு முக்கிய காரணம். இது சந்தையில் ரூபாய்க்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் டிசம்பர் மாதத்திற்கான தொழில் வளர்ச்சி குறியீடு 58.90ஆக குறைந்துள்ளது. இது, கடந்த பிப்ர வரி மாதத்துக்கு பிறகு காணப்படும் குறைந் த பட்ச வளர்ச்சி என்றாலும், இந்த குறியீடு 50க்கும் மேல் இருப்பதால் இந்திய பொருளாதாரம் இன்னும் வலுவான வளர்ச்சி பாதையிலேயே இருப்பதை காண்பிக்கிறது.

Image 1509465


அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2021க்கு பிறகு மிக அதிகபட்சமாகும். இதனால், உலக சந்தையில் டாலரின் ஆதிக்கம் சற்று குறைந்துள்ளது.

பணப்புழக்கத்தை அதிகரிக்க, ரிசர்வ் வங்கி ஏற்கனவே 50,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்களை வாங்கிய நிலையில், இன்று மீண்டும் 50,000 கோடி மதிப்பில் வாங்க உள்ளது. இது, சந்தையை நிலைப்படுத்த உதவும்.

தற்போது ரூபாய் மதிப்பு 90.00 என்ற நிலையில், வலுவான ஆதரவை பெற்றுள்ளது. ஒருவேளை இது மீண்டும் 90.50ஐ தாண்டினால், மீண்டும் 91.00 வரை செல்ல வாய்ப்பு உள்ளது. எனினும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் ரூபாயை நிலைப்படுத் தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us