ADDED : நவ 01, 2025 01:43 AM

ரிசர்வ் வங்கியின் தலையீட்டை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன், 87.63 ரூபாய் வரை மீண்டு வந்தது. ஆனால், அந்த ஆதாயங்கள் தற்போது மறைந்துவிட்டன. மாறிவரும் உலகளாவிய நிலைமைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அழுத்தங்களால், ரூபாய் மீண்டும் அக்டோபர் மாத துவக்கத்தில் காணப்பட்ட நிலையை நோக்கி சரிந்துள்ளது.
பொதுவாக, ரூபாய் கடுமையாக பலவீனமடையும்போது, ரிசர்வ் வங்கி அதை நிலைப்படுத்த தலையிடும். ஆனால் இந்த முறை, தலையிடாமல் இருப்பதை தேர்ந்தெடுத்தது. காரணம், மாறிவரும் பணப்புழக்க நிலைமை தான்.
ரூபாயை ஆதரிப்பதற்காக, ரிசர்வ் வங்கி முன்பு மேற்கொண்ட டாலர் விற்பனை, சந்தையில் பணப் புழக்கத்தை குறைத்துள்ளது. இருப்பினும் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக, 41,000 கோடி ரூபாய் அளவுக்கு திரட்ட பல பெரிய ஐ.பி.ஓ.,க்கள் வரவுள்ளன.
இது வெளிநாட்டுப் பணத்தை ஈர்க்கக்கூடும்; ரூபாய்க்கு மற்றொரு ஆதரவாக அமையும்.
தற்போதைக்கு, உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் விலகி நிற்கும் முடிவால், ரூபாய் அழுத்தத்தில் உள்ளது. -அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் மாற்றம் வருகிறதா என்பதை சந்தை உன்னிப்பாகக் கவனிக்கிறது. இது ரூபாயின் மதிப்ப உயர்வுக்கு அடுத்த துா ண்டுதலை வழங்கலாம்.
தொழில்நுட்ப ரீதியாக, எதிர்ப்பு நிலை 88.70-88.80 என்பதற்கு அருகில் உள்ளது. அதேசமயம், ஆதரவு நிலை 87.60-87.70 ஆகியவற்றுக்கு இடையே உள்ளது. இதற்குக் கீழே ஒரு சரிவு ஏற்பட்டால், குறுகிய காலத்தில் 87.20-ஐ நோக்கி செல்லக்கூடும்.
அமித் பபாரி,
நிர்வாக இயக்குநர்,
சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்

