டெக்னிக்கல் அனாலிசிஸ் : செய்திகளே சந்தையின் திசையை மாற்றியமைக்கும்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : செய்திகளே சந்தையின் திசையை மாற்றியமைக்கும்
UPDATED : நவ 01, 2025 02:05 AM
ADDED : நவ 01, 2025 01:45 AM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 25,863.80 25,953.75 25,711.20 25,722.10
நிப்டி பேங்க் 57,942.45 58,254.95 57,656.95 57,776.35
![]() |
நிப்டி
சிறிய இறக்கத்தில் ஆரம்பித்து, சற்று ஏற்றமடைந்து, பின்னர் தொடர்ந்து இறங்கி, நாளின் இறுதியில் 155 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 15 இறக்கத்துடனும்; 1 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு, குறைந்தபட்சமாக 0.27% இறக்கத்துடனும்; நிப்டி குறியீடு அதிக பட்சமாக 0.60% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 2 ஏற்றத்துடனும்; 15 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி 'பி.எஸ்.யு., பேங்க்' அதிகபட்சமாக 1.56% ஏற்றத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.32% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,181 பங்குகளில் 1,263 ஏற்றத்துடனும்; 1,802 இறக்கத்துடனும்; 116 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.
![]() |
லாபத்தை வெளியே எடுக்க முயலும் விற்பனையும், உலகச் செய்திகளும் இணைந்து, சந்தையில் இறக்கத்தை கொண்டுவருவதற்கான வாய்ப்புள்ளது. எம்.ஏ.சி.டி., இன்னமும் பாசிட்டிவ்வாக இருந்தாலும், ஏற்றம் தொடர்வதற்கு முன்னால் கன்சாலிடேஷன் நடக்கலாம். செய்திகளை வைத்தே, அடுத்த கட்டத்துக்கு நிப்டி நகர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஆதரவு 25,635 25,550 25,450
தடுப்பு 25,875 26,030 26,125
நிப்டி பேங்க்
நிப்டி பேங்க் இறக்கத்தில் ஆரம்பித்து, சிறிது ஏற்றம் கண்டு, பின்னர் நாள் முழுவதும் இறக்கத்தில் இருந்து மீள முயற்சித்து தோல்விடைந்து, நாளின் இறுதியில் 254 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. தொடர்ந்து 'ஓவர் பாட்' என்ற நிலையில் இருந்த நிப்டி பேங்க், தற்சமயம் இறக்கத்தை சந்தித்துள்ளது. இந்த லெவலில் கன்சாலிடேஷன் நடக்க வாய்ப்புள்ளது. 57,900-த்திற்கு மேலே சென்றால் மட்டுமே, ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆதரவு 57,530 57,290 57,060
தடுப்பு 58,130 58,490 58,720
நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 426.20 16.30 5,13,42,361 41.86
எட்டர்னல் 318.00 -11.35 3,42,41,754 67.02
எச்.டி.எப்.சி., பேங்க் 987.95 -10.20 2,32,21,330 62.57
என்.டி.பி.சி., 336.45 -8.70 1,86,51,312 65.66
ஐ.டி.சி., 419.95 1.20 1,85,99,864 51.82
நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
எஸ் பேங்க் 22.77 0.54 21,08,92,173 33.54
சுஸ்லான் எனர்ஜி 59.35 0.84 10,80,26,021 35.32
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 81.70 2.77 9,56,66,531 47.24
பாரத் ஹெவில் எலெக்ட்ரிக்கல்ஸ் 264.50 3.21 2,32,80,006 29.63
அசோக் லேலண்ட் 141.40 0.63 1,82,13,013 46.57
நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
பந்தன் பேங்க் 156.55 -14.03 6,18,47,492 43.88
மணப்புரம் பைனான்ஸ் 271.00 -3.90 1,59,80,536 28.30
பைவ்ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் 651.10 8.35 1,58,31,741 11.40
இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் 139.31 -4.24 1,45,49,711 35.52
என்.பி.சி.சி., (இந்தியா) 117.20 -1.17 1,12,63,219 37.61
நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்
நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை
ஸ்ட்ரைட்ஸ் பார்மா 931.00 10.69 92,20,861
பி.எஸ்.இ., லிட் 2,480.10 22.83 78,14,555
டைம் டெக்னோ பிளாஸ்ட் 216.20 20.73 25,01,482
கனரா பேங்க் 136.69 34.64 8,05,24,287
அரோபிந்தோ பார்மா 1,144.00 40.02 35,57,298
*****


