ADDED : செப் 25, 2025 03:19 AM

அ மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, அதன் வரலாறு காணாத குறைந்த அளவைத் தொட்ட பின், புதன்கிழமை அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு 88.69 என்ற அளவில் மிகக் குறைந்த மட்டத்தில் வர்த்தகமானது.
டாலரின் வலிமை குறுகிய காலத்திற்கு குறைந்தபோதிலும், தொடர்ந்து நிலவிவரும் சந்தை அழுத்தங்கள் காரணமாக, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த ஆண்டு, பெரும்பாலான ஆசிய நாடுகளின் கரன்சிகளை விட இந்திய ரூபாய் பின்தங்கியுள்ளது.
அமெரிக்காவின் விசா கட்டுபாடுகள், இந்திய ஏற்றுமதி மீதான வரி அதிகரிப்பு, வர்த்தக பரிவர்த்தனை குறைவு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுதல் ஆகியவை ரூபாயின் மதிப்பை மேலும் பலவீனமாக்குகின்றன.
இந்நிலையில், 88.40-ல் இருந்த எதிர்ப்பு தற்போது முறியடிக்கப்பட்டதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 89.00 --89.10 வரை செல்ல வாய்ப்புள்ளது.
இருப்பினும், இந்த ஏற்றம் தற்காலிகமாகத் தோன்றுகிறது. டாலர் பலவீனமாகவே உள்ளது. அமெரிக்க வர்த்தக பேச்சுகளில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டால், ரூபாயின் மதிப்பு வேகமாக உயரக்கூடும்.
அமித் பபாரி,
நிர்வாக இயக்குநர்,
சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்