எஸ்.ஐ.பி., – எஸ்.டி.பி., முதலீடுகளை ‘பிராங்க்ளின் டெம்பிள்டன்’ நிறுத்தியது
எஸ்.ஐ.பி., – எஸ்.டி.பி., முதலீடுகளை ‘பிராங்க்ளின் டெம்பிள்டன்’ நிறுத்தியது
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:36 PM
வெளிநாட்டு முதலீட்டு வரம்புகள் தொடர்பான செபி விதிமுறைகளை பின்பற்றும் விதமாக, தனது இரண்டு சர்வதேச மியூச்சுவல் பண்டு திட்டங்களில் எஸ்.ஐ.பி., மற்றும் எஸ்.டி.பி., பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ‘பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 1ம் தேதி முதல் 2027ம் ஆண்டின் பிப்ரவரி 28ம் தேதி வரை இந்த தற்காலிக நிறுத்தம் அமலில் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 3 மாத கால இடைவெளிக்கு பிறகு, மார்ச் 1, 2027 முதல் ஏற்கனவே உள்ள எஸ்.ஐ.பி., மற்றும் எஸ்.டி.பி.,முதலீடுகள் தானாகவே மீண்டும் தொடங்கும்.
இதற்காக முதலீட்டாளர்கள் தனியாக எந்த விண்ணப்பமோ அல்லது நடவடிக்கையோ எடுக்க தேவையில்லை.
வங்கி கணக்கில் போதிய இருப்புதொகை வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும், தேதிகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் நிறுவனத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்படும் எனவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த திட்டங்களுக்கு?
1. ‘பிராங்க்ளின் இந்தியா ஏசியன் ஈக்விட்டி பண்டு’
2.‘பிராங்க்ளின் யு.எஸ்., ஆப்பர்சுனிட்டீஸ் ஈக்விட்டி ஆக்டிவ் பண்டு ஆப் பண்ட்ஸ்’
