தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : அலுமினிய சந்தையை ஆளும் ஹிண்டால்கோ

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : அலுமினிய சந்தையை ஆளும் ஹிண்டால்கோ

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : அலுமினிய சந்தையை ஆளும் ஹிண்டால்கோ


UPDATED : ஜூலை 19, 2026 03:03 AM

ADDED : ஜூலை 19, 2026 02:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 03:03 AM ADDED : ஜூலை 19, 2026 02:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனமான 'ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்' தன் சர்வதேச துணை நிறுவனமான 'நோவெலிஸ்' வாயிலாக, உலகின் மிகப்பெரிய அலுமினிய மறுசுழற்சி நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் அலுமினிய உருக்காலை, தாமிர உருக்காலை மற்றும் நோவெலிஸின் சர்வதேச தட்டையான தயாரிப்புகள் என மூன்று முக்கிய வணிக பிரிவுகளை கொண்டு இயங்குகிறது.

தற்போதைய சூழலில் இந்த முதலீட்டு வாய்ப்பு மூன்று முக்கிய துாண்களை அடிப்படையாக கொண்டது.

Image 1600372


முதலாவதாக, ஹிண்டால்கோவின் இந்திய உருக்காலைகள் உலகிலேயே மிகக்குறைந்த செலவில் (டன்னுக்கு 2,000 முதல் 2,200 டாலர்) அலுமினியத்தை உற்பத்தி செய்து, லண்டன் உலோக சந்தை விலையின்படி டன்னுக்கு 1,400 டாலருக்கும் அதிகமான செயல்பாட்டு லாபத்தை ஈட்டுகின்றன.

இரண்டாவதாக, சல்பூரிக் அமில விலை உயர்வால் கடந்த 2026 நிதியாண்டில் தாமிர வணிகம் வரலாற்று உச்ச லாபத்தை எட்டியுள்ளது.

மூன்றாவதாக, கடந்த கால ஆலை விபத்துக்கு பின் நோவெலிஸ் நிறுவனம் மீண்டு வருவதுடன், அதன் புதிய ஆலை திட்டம் ஆண்டுக்கு 600 கிலோ டன் கூடுதல் உற்பத்தி திறனை வழங்கவுள்ளது.

சந்தை விலை, குறைவான உற்பத்தி செலவு, கீழ்நிலை தயாரிப்புகளின் வளர்ச்சி ஆகியவற்றால் வரும் 2029 நிதியாண்டு வரை உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் தெளிவான திட்டத்தை நிறுவனம் வகுத்துள்ளது.

விரிவாக்க பணிகள்

ஹிண்டால்கோ நிறுவனம் இந்தியாவிலும் நோவெலிஸிலும் மூலதன முதலீடுகளை அதிவேகமாக மேற்கொண்டு வருகிறது. இந்திய ஆலைகளுக்கான முதலீடு நடப்பு 2027ம் நிதியாண்டில் 12,000 கோடி ரூபாயாகவும், அடுத்த 2028ம் நிதியாண்டில் 15,000 முதல் 17,000 கோடி ரூபாயாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நோவெலிஸின் புதிய ஆலை விரிவாக்கத்திற்கு முதலீடு 210 முதல் 240 கோடி டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய அலுமினிய உற்பத்தி திறன் ஆண்டுக்கு 1,350 கிலோ டன்கள். ஹிண்டால்கோவின் ஆதித்யா ஆலையின் இரு கட்ட விரிவாக்க பணிகள் வாயிலாக, வரும் 2029 நிதியாண்டில் இது 1,710 கிலோ டன்னாக உயரும்.

நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று நிலக்கரி சுரங்கங்கள், குறிப்பாக மிகக்குறைந்த அகழ்வு செலவை கொண்ட மீனாட்சி சுரங்கம், சந்தை விலையை விட மிகக்குறைந்த செலவில் நிலக்கரியை வழங்கி நீண்ட கால அடிப்படையில் செலவை குறைக்க பெரிதும் உதவும்.

என்ன காரணம்?

குறைந்த அலுமினிய உற்பத்தி செலவு: மேற்கத்திய ஆலைகளில் ஒரு டன் அலுமினியம் தயாரிக்க 3,400 டாலருக்கு மேல் செலவாகும் போது, ஹிண்டால்கோவிற்கு வெறும் 2,000 முதல் 2,200 டாலர் மட்டுமே செல வாகிறது.

சொந்த தாது சுரங்கங்கள், மலிவான மின்சாரம், சொந்த நிலக்கரி ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள். தற்போதைய சந்தை விலையில் ஹிண்டால்கோ டன்னுக்கு 1,500 டாலர் செயல்பாட்டு லாபம் பெறும்போது, மேற்கத்திய நிறுவனங்களோ லாப நஷ்டமில்லாத சமநிலையை எட்டவே போராடி வருகின்றன.

சர்வதேச வினியோகம்

மத்திய கிழக்கு நாடுகளின் உற்பத்தி பாதிப்பால், வரும் 2026ம் ஆண்டில் அலுமினிய சந்தையின் தட்டுப்பாடு 1.50 மில்லியன் டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக கையிருப்பு 40 நாட்களுக்கு உள்ளதால் சந்தை விலை நிலையாக நீடிக்கும்.

மீட்சி பாதை

நோவெலிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தை நீண்ட காலத்தில் 600 டாலருக்கு மேல் உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தாமிர வணிகத்திலும் சல்பூரிக் அமில விலை உயர்வால் தற்காலிக கூடுதல் லாபம் கிடைத்துள்ளது.

தயாரிப்பில் கவனம்

இந்தியாவில் மின்கல தகடுகள், மின்சார வாகன பாகங்கள் மற்றும் தாமிர குழாய்கள் போன்ற கூடுதல் மதிப்புள்ள பொருட்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், கடந்த 2026ம் நிதியாண்டில் டவுன்ஸ்ட்ரீம் அலுமினிய பிரிவின் எபிட்டா லாபம் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலக சந்தை விலை மாற்றங்களிலிருந்து நிறுவனத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.

முக்கிய சவால்கள்

அதிகரிக்கும் கடன் சுமை: நிறுவனத்தின் வளர்ச்சி பாதையில் அதிகரிக்கும் கடன் சுமை முக்கிய சவால். 'பே மினெட்' ஆலை விரிவாக்கம் மற்றும் நிதி உதவிகளால் ஹிண்டால்கோவின் நிகர கடன் ஒரே வருடத்தில் 35,300 கோடி ரூபாயிலிருந்து 64,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதனால் கடன் மற்றும் லாப விகிதமும் உயர்ந்துள்ளது. திட்டங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டால் கடன் சுமை இன்னும் அதிகரிக்கக்கூடும்.

ஆலைக்கு செலவு

அடுத்ததாக, புதிய திட்டத்தின் மொத்த செலவு திட்டமிட்டதை விட இருமடங்காக அதிகரித்து 500 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால், மூலதன முதலீட்டின் மீதான லாபம் பாதியாக சரிந்துள்ளதுடன், இதன் முழுமையான லாபம் 2028 - 29ம் நிதியாண்டில்தான் வர தொடங்கும்.

விலை அபாயங்கள்

லண்டன் உலோக சந்தையில் அலுமினியத்தின் விலை கணிசமாக குறைந்தால் லாபம் பெருமளவு பாதிக்கும் அபாயமும் உள்ளது. வரும் நிதியாண்டுகளில் 55,000 முதல் 60,000 கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படுவதால் வலுவான பணவரவு அவசியமாகிறது.

குறைவான விலை

நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டு அலுமினிய தேவையில் 29 சதவீதம் மட்டுமே டன்னுக்கு 3,013 டாலர் என்ற முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், லாபம் சந்தை விலை மற்றும் டாலர் மதிப்பை நேரடியாக சார்ந்து ள்ளது.

எதிர்பார்ப்புகள்

வரும் 2027 - 28ம் காலகட்டத்தில் ஆலைகள் வழக்கம் போல செயல்பட தொடங்குவது மற்றும் புதிய ஆலை பயன்பாட்டிற்கு வருவது சாதகமாக அமையும். இந்தியாவின் டவுன்ஸ்ட்ரீம் உற்பத்தி பிரிவுகள் வாயிலாக வருமானம் வரத்தொடங்குவதும், புதிய நிலக்கரி சுரங்க உற்பத்தி வாயிலாக மின்சார செலவு குறைவதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வரும் 2028 - 31 காலகட்டத்தில், ஆதித்யா ஆலை விரிவாக்கம் வாயிலாக 3.60 லட்சம் டன் கூடுதல் உற்பத்தி திறன் சேர்க்கப்படும்.

புதிய ஆலைகள் சீரான உற்பத்தி நிலையை அடைவதுடன், குறைந்த செலவு கொண்ட மீனாட்சி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுப்பது வேகமெடுக்கும். நோவெலிஸ் ஆலைகளின் செலவு குறைப்பு நடவடிக்கைகள் வாயிலாக கோடிக்கணக்கான டாலர்கள் மிச்சப்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த கடன் சுமை வரும் 2029 நிதியாண்டில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



பொறுப்பு துறப்பு

இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கி கொண்டு இருக்கலாம் அல்லது விற்று கொண்டு இருக்கலாம் என்பதை கவனத்தில் வைத்து கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us