உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 10:36 PM

அ நிறம் | அளவு
கெயில் காஸ் நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளில், 25 சதவீத பங்குகளை புதிய பங்கு வெளியீடு வாயிலாக விற்க கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மதிப்பு, பங்கு விலை மற்றும் நிபந்தனைகள் குறித்து இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. புதிய பங்குகள் வெளியிட்டு நிதி திரட்ட, கெயில் நிறுவன இயக்குநர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கெயில் காஸ் தற்போது 16 இடங்களில் நேரடியாகவும், ஒன்பது இடங்களில் கூட்டு வர்த்தகம் வாயிலாகவும் செயல்பட்டு வருகிறது.
