உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 10:36 PM

அ நிறம் | அளவு
ஆர்.
பி.ஐ., வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் கிரெடிட் கார்டு வாயிலான செலவு 5.90 சதவீதம் சரிந்து 2.04 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, அதாவது கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மதிப்பில் சரிவு பதிவாகியிருப்பது இதுவே முதன்முறையாகும். நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நவம்பரில் வருவதால், நுகர்வோரின் பெரிய அளவிலான கொள்முதல் அக்டோபருக்கு மாறியுள்ளது. இதன் காரணமாக, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண்டிகை கால விற்பனை உச்சமடைந்து, நாட்டின் கிரெடிட் கார்டு பயன்பாட்டு செலவு மீண்டும் 2.28 – 2.38 லட்சம் கோடி ரூபாய் வரை உயரும் என 'கேர் எட்ஜ்' ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
