மின்னும் தங்க முதலீடுகள் சறுக்கும் சந்தை குறியீடுகள்
மின்னும் தங்க முதலீடுகள் சறுக்கும் சந்தை குறியீடுகள்
UPDATED : செப் 25, 2025 03:10 AM
ADDED : செப் 25, 2025 03:09 AM

புதுடில்லி:தொடர்ச்சியாக ஒவ்வொரு 'தீபாவளி டூ தீபாவளி' ஆண்டிலும், முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி வழங்குவதில், இந்திய பங்குச்சந்தை குறியீடுகளை பின்னுக்கு தள்ளி வருகிறது தங்கம்.
![]() |
கடந்த 8 ஆண்டுகளில், தீபாவளி டூ தீபாவளியில் பதிவான தரவுகளின் படி, அதிக லாபம் வழங்கியதில், 6 முறை சந்தை குறியீடுகளை தங்கமே வென்றுள்ளது. 2017 மற்றும் 2021ல் மட்டும் சரிவைக் கண்டது.
சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
மத்திய வங்கிகளில் தங்கத்தின் கையிருப்பை அதிகரித்துக் கொண்டே இருப்பது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் மேலும் வட்டியை குறைப்பதற்கான எதிர்பார்ப்புகள் இருப்பதால், பண்டிகை காலத்துக்கு பின்னரும் தங்கம் தொடர்ந்து உச்சத்தில் இருக்கக்கூடும்.
![]() |
அமெரிக்க டாலருக்கு மாற்றாக முன்வைக்கப்படும் கரன்சி தொடர்பான நகர்வுகள் இதை வெளிப்படுத்துகிறது. இதனால், முதலீட்டாளர்கள் புதிய நிச்சயமற்ற நிலைக்குத் தயாராகி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக, பங்குச் சந்தை குறியீடுகளை விட அதிக லாபம் தருகிறது தங்கம்