உள்ளடக்கத்திற்கு செல்ல

கடன் பத்திர வெளியீட்டு முடிவால் சரிவில் இருந்து மீளும் 'கோத்ரேஜ்'
கடன் பத்திர வெளியீட்டு முடிவால் சரிவில் இருந்து மீளும் 'கோத்ரேஜ்'
ADDED : ஜூன் 25, 2026 04:49 AM

அ நிறம் | அளவு
'கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் இயக்குநர் குழு, இரண்டு தொடர்களாக, மொத்தம் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்.சி.டி.,) வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி, நிறுவனத்தின் வணிக வளர்ச்சி, புதிய முதலீடுகள் மற்றும் கடன்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை அடுத்து, நேற்று, வர்த்தகத்தின் இடையே, நிறுவனத்தின் பங்கு விலை 3.33 சதவீதம் வரை உயர்ந்து 1,168.80 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. வர்த்தக முடிவில் 1.91 சதவீத உயர்வுடன், 1,152.70 ரூபாய் என்ற விலையில் நிலைபெற்றது. கடந்த மார்ச் 30 அன்று தொட்ட 52 வார குறைந்தபட்ச விலையான 744.20 ரூபாயில் இருந்து, இப்பங்கு தற்போது 55 சதவீதத்திற்கும் மேல் லாபத்தை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
