அன்னிய செலாவணி கையிருப்பில் தங்கம் இருமடங்காக அதிகரிப்பு
அன்னிய செலாவணி கையிருப்பில் தங்கம் இருமடங்காக அதிகரிப்பு
ADDED : ஜூன் 02, 2026 07:13 AM

உ லக சந்தையில் தங்கத் தின் விலை அதிரடியாக உயர்ந்ததை தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி மற்றும் பொருளாதார கட்டமைப்பில் தங்கம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
சர்வதேச விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றால், ஆர்.பி.ஐ.,யின் மொத்த அன்னிய செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளதுடன், இதன் மதிப்பு ஒரே ஆண்டில் சுமார் 64 சதவீதம் உயர்ந்துள்ளது.
முக்கிய விபரங்கள் மே 22ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க இருப்பு ரூ.11 லட்சம் கோடி
மார்ச் 2026 நிலவரப்படி, ஆர்.பி.ஐ.,யின் நிகர வெளிநாட்டு சொத்துக்களில் தங்கத்தின் பங்கு 17.20 சதவீதமாக அதிகரிப்பு
இது மார்ச் 2024ல் வெறும் 8.30 சதவீதமாகவும், மார்ச் 2025ல் 12 சதவீதமாகவும் இருந் தது
மார்ச் 31, 2026 நிலவரப்படி, ஆர்.பி.ஐ.,யின் வசம் மொத்தம் 880.52 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது
இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை மாற்றத்தின்படி, வெளிநாடுகளில் உள்ள தங்கத்தை ஆர்.பி.ஐ. தாயகம் நோக்கி நகர்த்தி வருகிறது. அதன்படி, கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் 168.06 மெட்ரிக் டன் தங்கம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
