உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 04, 2026 02:19 AM

அ நிறம் | அளவு
அமெரிக்காவின் பலவீனமான வேலைவாய்ப்பு தரவுகள் வெளியானதை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்தது. இதன் எதிரொலியாக, நேற்று இந்திய பங்கு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்., 2 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்து
முதலீட்டாளர்களுக்கு சிறப்பான லாபத்தை அளித்துள்ளன.
சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை ஒரு சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் (31.100 கிராம்) 4,165 டாலராக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாத டெலிவரிக்கான தங்கம் பியூச்சர் 1.30 சதவீதம் உயர்ந்து 4,178 டாலராக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 2.10 சதவீதம் உயர்ந்து அவுன்ஸிற்கு 62.28 டாலராகவும், பிளாட்டினம் 2.40 சதவீதம் உயர்ந்து 1,655 டாலராகவும் வர்த்தகமானது.
