தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை துளிகள்: சந்தை துளிகள்

சந்தை துளிகள்: சந்தை துளிகள்

சந்தை துளிகள்: சந்தை துளிகள்


UPDATED : ஜூலை 04, 2026 02:37 AM

ADDED : ஜூலை 04, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 02:37 AM ADDED : ஜூலை 04, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீன நிறுவனங்களுக்கு அனுமதி

மின்சார துறை பங்குகள் சரிவுஅரசு திட்டங்களில் நேரடியாக பங்கேற்க சீனாவின் நான்கு மின் உபகரண நிறுவனங்களுக்கு, 2 ஆண்டுகள் சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், மின்சார துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

Image 1594806
ஏற்றம் கண்ட பாதுகாப்பு துறை பங்குகள்

பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக கருதப்படுவதால், உள்நாட்டு பாதுகாப்பு துறை சார்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் போர்ஜ் ஆகிய முன்னணி நிறுவனங்களின் பங்குகள் நேற்று ஏற்றம் கண்டன.

அதானி கியூ.ஐ.பி., ரூ.15,000 கோடியாக உயர்வு

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பெருநிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக, 10,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்ட நிலையில், 3.80 மடங்கு கூடுதல் வரவேற்பு கிடைத்ததால், இலக்கை 15,000 கோடி ரூபாயாக உயர்த்தியது. இருப்பினும், இதன் உத்தேச பங்கு வெளியீட்டு விலை 2,883 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இது முந்தைய சந்தை விலையான 3,177.50 ரூபாயை விட 9.30 சதவீதம் தள்ளுபடி விலையாகும்.

பெரிய முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலைக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டதால், நேற்று வர்த்தகத்தின் இடையே அதானி பங்கு விலை 3.25 சதவீதம் வரை சரிந்தது. ஆனால், வர்த்தக முடிவில் சரிவிலிருந்து மீண்டு, 1.02 சதவீத உயர்வுடன் 3,209.90 ரூபாய் என்ற விலையில் நிலைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us