தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/14 மாத சரிவில் தங்கம் விலை வெள்ளியும் கடும் வீழ்ச்சி

14 மாத சரிவில் தங்கம் விலை வெள்ளியும் கடும் வீழ்ச்சி

14 மாத சரிவில் தங்கம் விலை வெள்ளியும் கடும் வீழ்ச்சி


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச கமாடிட்டி சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் விற்பனை அழுத்தம் காரணமாக, தங்கம் விலை கடந்த 14 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாக ஒரு அவுன்ஸ் (31.100 கிராம்) 3,800 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு எம். சி.எக்ஸ்., சந்தையில் 10 கிராம் தங்கம் டிசம்பர் பியூச்சர்ஸ் விலை 6,028 ரூபாய் சரிந்து, ஓராண்டு குறைந்தபட்ச அளவான 1,21,424 ரூபாயை எட்டியது. இந்த ஆண்டின் அதிகபட்ச விலையான 1,80,779 ரூபாயிலிருந்து தங்கம் விலை கிட்டத்தட்ட 60,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் டிசம்பர் மாத பியூச்சர் விலை 7,000 ரூபாய் சரிந்து 1,50,490 ரூபாய்க்கு வர்த்தகமானது.

காரணங்கள்



1 அமெரிக்காவில் பணவீக்கம் குறையாததால், பெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு

2 அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் கருவூல பத்திரங்களின் வருவாய் உயர்ந்து, தங்கம் மீதான முதலீட்டு ஆர்வத்தை குறைத்திருப்பது

3 தொழில்நுட்ப துறை பங்குகளில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகளை விற்று பணமாக்கி வருவது

4 உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பது, தொழிற்துறை பயன்பாடு அதிகம் கொண்ட வெள்ளியின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது

5 வெள்ளியை அதிகம் நுகரும் சீனாவின் தேவை குறைவு, விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

தாக்கங்கள்



 ரிசர்வ் வங்கி விதிகளின்படி நகை கடனுக்கான ‘எல்.டி.வி.,’ வரம்பு 75 முதல் 85 சதவீதத்துக்குள் பராமரிக்கப்பட வேண்டும். தங்கம் விலை மேலும் 10 முதல் 15 சதவீதம் வரை சரிந்தால், எல்.டி.வி. விகிதம் 85 – 88 சதவீதத்தை தாண்டிவிடும்

 இதனால் கடன் வாங்கியவர்களிடம் கூடுதல் தங்கத்தை அடகு வைக்கவோ அல்லது கடன் தொகையில் ஒரு பகுதியை உடனடியாக திரும்ப செலுத்தவோ நிதி நிறுவனங்கள் நிர்பந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது

 இந்த நெருக்கடி அச்சம் காரணமாக ‘ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ், முத்துாட் பைனான்ஸ் மற்றும் மணப்புரம் பைனான்ஸ்’ ஆகிய நகை கடன் நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 5 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

நம்பிக்கை


தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்பதால், விலை இன்னும் குறையுமா என காத்திருந்து ஒரே நேரத்தில் மொத்தமாக முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும். சர்வதேச விலை மாற்றங்களுடன், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமும் உள்நாட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.



‘தங்கம் – வெள்ளி விகிதம்’


82 ஆக உயர்ந்தது
‘தங்கம் - -– வெள்ளி விகிதம்’ தற்போது 82ஐ தாண்டியுள்ளது. இது தங்கத்துடன் ஒப்பிடுகையில் வெள்ளி மிகவும் மலிவான விலையில் கிடைப்பதை காட்டுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்குவதற்கு எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவைப்படும் என்பதை கணக்கிடுவதே ‘தங்கம் – வெள்ளி விகிதம்’ ஆகும். தற்போது இந்த விகிதம் 82 ஆக இருப்பதால், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலைக்கு சமமாக 82 அவுன்ஸ் வெள்ளியை வாங்க முடியும் என்று அர்த்தம்.



தங்கம் விலை மேலும் 15% சரிந்தால்


நிதி நிறுவனங்களில் நெருக்கடி
தங்கம் விலை தொடர் சரிவால், தங்க நகை கடன் துறையில் கடனை திரும்ப செலுத்துவதில் நெருக்கடி அதிகரித்து வருவதாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
கடந்த 2026 செப்டம்பர் காலாண்டில் தங்கம் விலை 80 சதவீதம் வரை உயர்ந்திருந்ததால், நிதி நிறுவனங்கள் தங்களது நகை கடன் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரித்தன. தற்போது தங்கம் விலை உச்சத்திலிருந்து சரிந்து வருவதால், அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் பாதுகாப்பு மதிப்பு குறைந்து வருகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us