சிறு முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ் 'டிமேட்' பராமரிப்பு கட்டணம் குறைகிறது
சிறு முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ் 'டிமேட்' பராமரிப்பு கட்டணம் குறைகிறது
ADDED : டிச 26, 2025 03:14 AM

சி று முதலீட்டாளர்களுக்காக வழங்கப்படும் பி.எஸ்.டி.ஏ., எனும் அடிப்படை சேவைகளுக்கான 'டிமேட்' கணக்கு தொடர்பான விதிகளை, செபி எளிமைப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் 2026, மார்ச் 31 முதல் அமலுக்கு வருகின்றன.
தற்போதைய கட்டண விவரம்
ரூ.4 லட்சம் வரை: பங்குகள், பத்திரங்கள் இருந் தால் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் கிடையாது
ரூ. 4 - 10 லட்சம் வரை: ஆண்டு கட்டணம் ரூ. 100 + ஜி.எஸ்.டி., மட்டுமே
ரூ.10 லட்சத்திற்கு மேல்: சாதாரண கணக்கிற் கான கட்டணம் வசூலிக்கப் படும்
செபி அறிவித்துள்ள முக்கிய மாற்றங்கள்
ஒரு டிமேட் கணக்கு, பி.எஸ்.டி.ஏ., கணக்குக்கு தகுதி வாய்ந்ததா என்ற வரம்பை கணக்கிடும்போது பூஜ்ஜிய கூப்பன், பூஜ்ஜிய அசல் பத்திரம், பத்திரங்கள் மற்றும் பங்கு சந்தையின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பத்திரங்கள் போன்றவற்றின் மதிப்பானது சேர்க்கப்படக்கூடாது
*முதலீட்டாளரின் பி.எஸ்.டி.ஏ., தகுதி ஒவ்வொரு காலாண்டிலும் சரிபார்க்கப்பட வேண்டும்.
*ஒருவர் பி.எஸ்.டி.ஏ., கணக்கிற்கு தகுதியானவராக இருந்தால், அவருடைய கணக்கு தானாகவே அந்த வகைக்கு மாற்றப்படும். முதலீட்டாளர் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.
* கணக்கில் உள்ள பத்திரங்களின் மதிப்பானது, இறுதி சந்தை விலை அல்லது நிகரசொத்துமதிப்பு அடிப்படையில் கணக்கிடப்படவேண்டும்.
முதலீட்டாளர்களுக்கு இதனால் என்ன பயன்?
* பி.எஸ்.டி.ஏ., கணக்கிற்கான தகுதியை முதலீட்டாளர்கள் எளிதாக தக்கவைத்துக் கொள்ளமுடியும்
* தகுதியுள்ள முதலீட்டாளர்கள் தானாகவே குறைந்த கட்டண வசதியைப் பெறுவது உறுதி செய்யப்படும்.
*சிறிய முதலீட்டாளர்களுக்கு டிமேட் கணக்கை பராமரிப்பதற்கான செலவு சுமை குறையும்.

