ADDED : நவ 01, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட 'பில்லியன்ப்ரைன்ஸ் கேரேஜ் வெஞ்ச்சர்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான 'குரோவ்' ஆன்லைன் முதலீட்டு தளத்தை துவடங்கிய 4 நிறுவனர்கள் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 16,316 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் 4 பேர் இணைந்து, குரோவ் ஆன்லைன் முதலீட்டு தளத்தை துவங்கினர். தற்போது ஐ.பி.ஓ.,வுக்கு வரும் இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் அதிகபட்ச விலை 100 ரூபாய். நிறுவனர்கள் 4 பேரிடமும் மொத்தமாக 163.16 கோடி பங்குகள் உள்ளன. இதனால், இவர்களின் பங்கு மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

