கோல்டு பண்டுகளில் முதலீடு ஹெச்.டி.எப்.சி., ஏ.எம்.சி., தடை
கோல்டு பண்டுகளில் முதலீடு ஹெச்.டி.எப்.சி., ஏ.எம்.சி., தடை
ADDED : ஜூன் 05, 2026 02:10 AM

'ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு' நிறுவனம் தனது 'ஹெச்.டி.எப்.சி., கோல்டு இ.டி.எப்.,' மற்றும் 'ஹெச்.டி.எப்.சி., கோல்டு இ.டி.எப்., எப்.ஓ.எப்.,' ஆகிய இரண்டு திட்டங்களிலும் மொத்த முதலீடுகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிக தடை விதித்துள்ளது.
ஹெச்.டி.எப்.சி., கோல்டு இ.டி.எப்., 25 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேலான முதலீடுகள் ஏற்கப்படாது
பெரிய முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் பண்டு நிறுவனத்திடமே மேற்கொள்ளும் மொத்த முதலீடுகளுக்கு மட்டுமே தடை பொருந்தும்
வரும் ஜூன் 8ம் தேதி முதல் அமலாகிறது
ஹெச்.டி.எப்.சி., கோல்டு இ.டி.எப்., எப்.ஓ.எப்., மாதத்துக்கு 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுமதி
ஜூன் 5ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பின் பெறப்படும் பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும்.
தங்கம் இறக்குமதியை குறைத்து அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
