தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வெள்ளிக்கு கட்டாய ஹால்மார்க்: அவசரம் தவிர்க்கும் பி.ஐ.எஸ்.,

 வெள்ளிக்கு கட்டாய ஹால்மார்க்: அவசரம் தவிர்க்கும் பி.ஐ.எஸ்.,

 வெள்ளிக்கு கட்டாய ஹால்மார்க்: அவசரம் தவிர்க்கும் பி.ஐ.எஸ்.,


UPDATED : ஜூன் 05, 2026 02:19 AM

ADDED : ஜூன் 05, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2026 02:19 AM ADDED : ஜூன் 05, 2026 02:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெ ள்ளி பொருட்களுக்கு 'ஹால்மார்க்' முத்திரையை கட்டாயமாக்குவது பற்றி ஆய்வு செய்து வருவதாக 'பி.ஐ.எஸ்.,' தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2005 முதல், வெள்ளி பொருட்களுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பது தன்னார்வ தேர்வாகவே இருந்தது. 2025, செப்டம்பர் முதல் 'ஹெச்.யூ.ஐ.டி.,' எனும் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் பதிக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து வெள்ளியின் துாய்மையை சரிபார்க்கலாம்.

இந்நிலையில், தங்கத்தை விட வெள்ளியில் ஹால்மார்க் பதிப்பது சவாலானது என்று பி.ஐ.எஸ்., பொது இயக்குநர் சஞ்சய் கார்க் தெரிவித்துள்ளார்.

Image 1584255


அவர் மேலும் கூறியதாவது:

சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை வெள்ளி விற்பனை செய்கின்றன. நகை மட்டுமின்றி, வெள்ளியில் பர்னிச்சர் வரை பல்வேறு தயாரிப்புகள் இருக்கின்றன. கட்டாய ஹால்மார்க் முறையை எப்படி அமல்படுத்துவது என்று ஆய்வு செய்து வருகிறோம்.

தற்போது பி.ஐ.எஸ்., அமைப்பில் ஒட்டுமொத்த ஹால்மார்க் செயல்பாடுகளையும் 5 பேர் மட்டும் நடத்துகின்றனர். மற்ற வேலைகள் 'அவுட்சோர்ஸ்' செய்யப்பட்டுள்ளன. தன்னார்வமாக ஹால்மார்க் பதிப்பதில் அதிக முன்னேற்றம் இருந்தாலும், பி.ஐ.எஸ்., கவனமாகவே செயல்படுகிறது.

தவறுகளை தவிர்ப்பதற்காக மெதுவாகவே நகருகிறோம். கட்டாய ஹால்மார்க் முறையை படிப்படியாக கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us