உள்ளடக்கத்திற்கு செல்ல

ஹெச்டிஎப்சி, வங்கி பங்கு 7 வாரங்களில் இல்லாத உயர்வு
ஹெச்டிஎப்சி, வங்கி பங்கு 7 வாரங்களில் இல்லாத உயர்வு
ADDED : செப் 23, 2026 01:04 AM

அ நிறம் | அளவு
ஹெச் .டி.எப்.சி., வங்கி பங்குகள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உயர்ந்த நிலையில், ஏழு வாரங்களில் இல்லாத அளவாக நேற்று வர்த்தகத்தின் இடையே 749.30 ரூபாய் வரை சென்றது.
ஹெச்.டி.எப்.சி., வங்கியின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி சசிதர் ஜெகதீசனின் பதவிக்காலம் வரும் அக்., 26ம் தேதி முடிகிறது. இந்நிலையில், புதிய சி.இ.ஓ., பதவிக்கு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் மூத்த நிர்வாகி அனுாப் பாக்சி பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இவரை நியமிப்பது தொடர்பாக, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியிடம் ரிசர்வ் வங்கி கருத்து கேட்டுள்ளதாக வெளியான தகவலே பங்குகள் ஏற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் இவ்வங்கி பங்கு 4 சதவீதம் உயர்ந்திருந்தாலும், இந்த ஆண்டில் இதுவரை 25 சதவீத சரிவை கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
