உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 23, 2026 01:07 AM

அ நிறம் | அளவு
சீனாவில் உருவாகி உள்ள தட்டுப்பாடு காரணமாக, சர்வதேச சந்தையில் தாமிரத்தின் விலை தொடர்ந்து ஆறு நாட்களாக உயர்ந்து வருகிறது.
தாமிரம் நுகர்வில் சீனா உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் தொழில்துறை மற்றும் உற்பத்தி பணிகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தாமிர வினியோகம் இல்லை.
குறிப்பாக, ஷாங்காய் சந்தையில் தாமிர கையிருப்பு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
இதனால், செப்டம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலான ஆறு வர்த்தக நாட்களில், லண்டன் உலோக சந்தையில் தாமிரத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, அதன் பழைய உச்சத்தை நெருங்கி வருகிறது.
