டெக்னிக்கல் அனாலிசிஸ் : ஏற்றத்துக்கான வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது
டெக்னிக்கல் அனாலிசிஸ் : ஏற்றத்துக்கான வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது
ADDED : செப் 23, 2026 01:09 AM

22-09-2026
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 738.60 -0.90
எட்டர்னல் 342.00 6.10
டாடா ஸ்டீல் 184.97 1.57
கோல் இந்தியா 428.00 13.30
விப்ரோ 166.00 1.45
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
சுஸ்லான் எனர்ஜி 43.00 -0.34
எஸ் பேங்க் 23.20 0.03
ஸ்விக்கி 284.05 11.35
என்.ஹெச்.பி.சி., 76.01 0.21
அசோக் லேலண்du 160.75 -1.00
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
பந்தன் பேங்க் 184.70 5.70
ஐநாக்ஸ் விண்டு 77.90 0.40
ஹிந்துஸ்தான் காப்பர் 508.50 4.55
ஆர்.பி.எல்., பேங்க் 423.20 20.80
ரெடிங்டன் 411.00 18.95
மற்ற சில பங்குகளின் விலை விவரம்
ஆர்த்தி பார்மாலேப்ஸ் 875.50 29.05
பேங்க் ஆப் பரோடா 234.35 0.71
கர்நாடகா பேங்க் 332.00 17.45
ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 264.10 3.85
ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் 366.00 4.25
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 23,454.05 23,489.00 23,285.75 23,329.00
நேற்று 39 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி 10.30 மணியளவில் இறங்க ஆரம்பித்து -128 புள்ளிகள் வரை சென்று பின்னர் சற்று மீண்டு நாளின் இறுதியில் 85 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ல் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும;் 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிக பட்சமாக 0.41 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டிஸ்மால்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 0.44 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 1.21 சதவீத உயர்வுடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 0.86 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,670 நிறுவனங்களின் பங்குகளில் 1,677 ஏற்றத்துடனும்; 1,867 இறக்கத்துடனும்; 126 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டி முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேதான் நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., (-230.01) சிக்னல் லைனுக்கு கீழே இருப்பது இறங்குவதற்கான மொமொன்டம் இன்னும் இருப்பதையே காட்டுகிறது. ஆர்.எஸ்.ஐ., (34.61) இதனை உறுதி செய்வதாய் இருந்தாலும் 30 என்ற அளவுக்கு மேலே இருப்பதால் ஓவர்சோல்டு நிலையை அடையவில்லை என்பதை காட்டுகிறது.
ஆர்.ஓ.சி., (-2.28) என்ற அளவில் இருப்பது நெகட்டிவ் விலை மொமென்டம்தனை குறிக்கிறது. ஸ்டோக்காஸ்ட்டிக் 56 என்ற அளவிற்கு மீண்டிருப்பது மட்டுமே தற்போதைக்கு ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது. இது குறுகிய கால மொமென்டம் சற்று முன்னேற்றம் கண்டிருப்பதையும் சிறியதொரு ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு உருவாவதையும் காட்டுகிறது.
தற்போதைய சூழலில் 23,100-23,200 லெவலில் உடனடி சப்போர்ட்டும் 23,500-23,700 லெவல்தனில் உடனடி ரெசிஸ்டென்ஸும் இருக்கிறது 23,700-க்கு மேலே நிலைத்து வர்த்தகம் ஆகும் வரை தற்போதைய பியரிஷ் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டதாக கருத முடியாது.
நிப்டி 23,100-க்கு கீழே சென்றால் இறக்கம் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது.
ஆதரவு 23,245 23,165 23,085
தடுப்பு 23,450 23,570 23,650
