'ஹெச்.டி.எப்.சி., மிட்கேப் பண்டு' மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய்
'ஹெச்.டி.எப்.சி., மிட்கேப் பண்டு' மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய்
ADDED : ஜூன் 26, 2026 11:19 PM

'ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு' நிறுவனத்தின் 'ஹெச்.டி.எப்.சி., மிட்கேப் பண்டு' திட்டம் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு 97,350.48 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த மே-ஜூன் நிலவரப்படி, இத்திட்டத்தின் 'டைரக்ட் பிளான்' தொடக்கம் முதல் ஆண்டு சராசரி 20 சதவீத கூட்டுவட்டி வருமானத்தையும், 'ரெகுலர் பிளான்' 17.13 சதவீத வருமானத்தையும் அளித்துள்ளது. இது, இத்திட்டத்தின் பெஞ்ச்மார்க் குறியீட்டின் 15.04 சதவீத வருமானத்தை விட அதிகமாகும்.
இத்திட்டம் நடுத்தர அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. இந்நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களை விட வேகமாக வளரும் திறன் கொண்டவை. அதேநேரம், சந்தை சரிவுகளின்போது விலை ஏற்ற இறக்கமும் முதலீட்டு அபாயமும் சற்று அதிகமாக இருக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
