தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஹெச்.டி.எப்.சி., பங்கு 16 சதவீதம் உயர்ந்தது

ஹெச்.டி.எப்.சி., பங்கு 16 சதவீதம் உயர்ந்தது

ஹெச்.டி.எப்.சி., பங்கு 16 சதவீதம் உயர்ந்தது


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹெச்.டி.எப்.சி., வங்கியின் பங்குகள் கடந்த சில வர்த்தக தினங்களில் தொடர் ஏற்றத்தை சந்தித்து வந்த நிலையில், அதன் 52 வார குறைந்தபட்ச விலையிலிருந்து மீண்டு வந்து, தற்போது 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தாண்டி உள்ளது. கடந்த நான்கு வர்த்தக தினங்களில் மட்டும் 16 சதவீதம் உயர்வை இந்த பங்கு கண்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் நிறைவில் 2.47 சதவீத ஏற்றத்துடன் 779 ரூபாயில் நிறைவடைந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இது 12 சதவீதம் லாபத்தை ஈட்டியுள்ளது. எனினும், நடப்பாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 21 சதவீதம் சரிந்துள்ளது.

முதலீட்டாளர்களின் விற்பனை போக்கு 86 சதவீதம் வரை இருந்த நிலையில், தற்போது அது கணிசமாக குறைந்து 69 சதவீதமாகவும், வாங்கும் போக்கு 31 சதவீதமாகவும் மாறியிருப்பது, ‘பேங்க் நிப்டி’ குறியீடு தனது 4 வார ‘கன்சாலிடேஷன்’ வரம்பில் இருந்து வெளியேறி, 200 நாள் இ.எம்.ஏ.,வுக்கு மேல் வலுவான நிலையில் வர்த்தகமாகி வருவது முக்கிய காரணமாக தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us