உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 27, 2026 07:29 AM

அ நிறம் | அளவு
ம த்திய அரசின் பங்கு விற்பனை குறித்த அச்சம் தணிந்ததையடுத்து, 'ஹிந்துஸ்தான் ஜிங்க்' நிறுவன பங்கு விலை நேற்று 6 சதவீதம் வரை உயர்ந்தது. நேற்றைய வர்த்தக நிறைவில் இந்நிறுவன பங்கு ஒன்றின் விலை 5.72 சதவீதம் அதிகரித்து 626.50 ரூபாயாக முடிவடைந்தது.
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் தற்போது அரசின் பங்கு விற்பனை திட்டம் இல்லை என, முதலீட்டுத்துறை செயலர் அருணிஷ் சாவ்லா தெரிவித்திருந்தார். இதனால், ஆபர் பார் சேல் குறித்த அச்சம் குறைந்துள்ளதே இந்நிறுவன பங்குகள் உயர முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதனிடையே, தரகு நிறுவனமான ஜெப்ரிஸ், இந்நிறுவன பங்குகளை 'வாங்கலாம்' என்ற பரிந்துரையுடன் இலக்கு விலையை 750 ரூபாயாக உயர்த்தியுள்ளது. தற்போதைய நிலையில் இருந்து பங்கு மேலும் 27 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக ஜெப்ரிஸ் தெரிவித்துள்ளது.
