ADDED : ஆக 27, 2026 07:27 AM

சமீபத்தில் செபி அறிமுகம் செய்த 'லைப் சைக்கிள் பண்டு' வகையின் கீழ், 'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு' 3 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. முதலீட்டாளர்களின் இலக்கு காலம் நெருங்கும்போது, பங்கு முதலீடுகளை படிப்படியாக குறைத்து, கடன் உள்ளிட்ட ஒப்பீட்டளவில் நிலையான முதலீடுகளுக்கு மாறும் வகையில் முதலீடுகளை மாற்றியமைப்பதே இந்த பண்டுகளின் சிறப்பம்சமாகும்.
'லைப் சைக்கிள் பண்டு - 2031'
குறைந்தபட்ச முதலீடு : ரூ.100
விண்ணப்பிக்கும் காலம் : 2026, ஆக., 26 - - செப்., 9
நோக்கம்: 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் இலக்கை அடைய, பங்கு, கடன், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்து, இலக்குக்கு ஏற்ப முதலீட்டு விகிதத்தை மாற்றி, மூலதன மதிப்பு மற்றும் வருமானம் ஈட்டுவதே இதன் நோக்கம்.
'லைப் சைக்கிள் பண்டு - 2036'
குறைந்தபட்ச முதலீடு : ரூ.100
விண்ணப்பிக்கும் காலம் : 2026, ஆக., 26 - - செப்., 9
நோக்கம்: 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் இலக்கை அடைய, பங்கு, கடன், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்து, இலக்குக்கு ஏற்ப முதலீட்டு விகிதத்தை மாற்றி, மூலதன மதிப்பு மற்றும் வருமானம் ஈட்டுவதே இதன் நோக்கம்.
'லைப் சைக்கிள் பண்டு - 2041'
குறைந்தபட்ச முதலீடு : ரூ.100
விண்ணப்பிக்கும் காலம் : 2026, ஆக., 26 - - செப்., 9
நோக்கம் : பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் வாயிலாக மூலதன மதிப்பை அதிகரிப்பதுடன், கடன் மற்றும் மனி மார்க்கெட், இன்விட்கள், தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ் உள்ளிட்ட பிற சொத்து வகைகளில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுவதே நோக்கம்.
