டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே அடுத்தக் கட்ட நகர்வை தீர்மானிக்கும்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே அடுத்தக் கட்ட நகர்வை தீர்மானிக்கும்
UPDATED : ஆக 26, 2026 12:46 AM
ADDED : ஆக 26, 2026 12:42 AM

நேற்று 43 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி நாளின் இறுதியில் 115 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ல் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிந்தன.
இவற்றில், 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150' குறியீடு அதிகபட்சமாக 0.55 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 0.43 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 18 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., & டெலிகாம்' குறியீடு அதிக பட்சமாக 1.32 சதவீத உயர்வுடனும், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.20 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,637 நிறுவனங்களின் பங்குகளில் 1,672 ஏற்றத்துடனும்; 1,842 இறக்கத்துடனும்; 123 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டி எச்சரிக்கையுடன் கூடிய பாசிட்டிவ் என்ற டெக்னிக்கல் அமைப்பில் 14, 21, 50 மற்றும் 100 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., 52.39-ல் இருப்பது நிப்டியில் சிறிய அளவிலான பாசிட்டிவ் மொமென்டம் நிலவுவதை காட்டுகிறது. ஸ்டோக்காஸ்ட்டிக் 78.33 என்ற அளவினை அடைந்திருப்பது சற்று ஓவர் பாட் நிலைமையை நோக்கி செல்வதை காட்டுகிறது.
இருப்பினும், எம்.ஏ.சி.டி., சிக்னல் லைனுக்கு கீழே இருப்பதும் டைவர்ஜன்ஸ் - 32.69-ல் இருப்பதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகின்றன. 24,374 - -24,421 என்ற லெவல்களில் முக்கிய ரெசிஸ்டென்ஸை நிப்டி எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
இதனை தாண்டி ஏற்றம் கண்டால் 24,500 வரை செல்ல வாய்ப்புள்ளது. 24,290 - 24,300 லெவல் உடனடி சப்போர்ட்டாக உள்ளது. இதற்கு கீழே சென்றால் 24,228 - 24,190 போன்ற லெவல்களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.
எச்சரிக்கையுடன் கூடிய பாசிட்டிவ் டெக்னிக்கல் அமைப்பில் நிப்டி நிறைவடைந்துள்ள போதிலும் மேல் நோக்கி பயணிக்க மொமென்டம் இண்டிக்கேட்டர்கள் சாதகமாக மாறவேண்டியது அவசியம். செய்திகள் ஆதரவாக இருந்தால் மட்டுமே இது நடக்க வாய்ப்புள்ளது.
