வீட்டுக்கடன் காப்பீடு திட்டம் பாலிசி பஜார் ஆன்லைன் வசதி
வீட்டுக்கடன் காப்பீடு திட்டம் பாலிசி பஜார் ஆன்லைன் வசதி
ADDED : ஜன 09, 2026 02:22 AM

'பாலிசி பஜார்' நிறுவனம், ஆன்லைனில் வீட்டுக்கடன் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வங்கிகள் நேரில் வழங்கும் வீட்டுக்கடன் காப்பீட்டு திட்டங்களைவிட இது 72 சதவீதம் வரை குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
வங்கிகள் வழங்கும் காப்பீட்டு திட்டங்களில், காப்பீடுதாரருக்கு அசம்பாவிதம் நடந்தால், அந்த தொகை வங்கி கடனுக்கு ஈடாக எடுத்து கொள்ளப்படும். ஆனால், தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில், இழப்பீட்டு தொகை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என பாலிசி பஜார் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கடனை வாங்கும்போதே காப்பீட்டை எடுக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், கடன் வாங்கிய பின் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆன்லைன் பாலிசியில் சேரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைனில் நேரடியாக விற்கப்படுவதால், தரகு கட்டணம், கூடுதல் ஜி.எஸ்.டி., சுமைகளை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

