ADDED : ஜன 09, 2026 02:20 AM

திருநங்கை பணியாளர்கள் தங்களது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுவதற்கான நடைமுறைகளை இ.பி.எப்.ஓ., தற்போது எளிமையாக்கியுள்ளது.
திருநங்கையருக்கான தேசிய இணையதளம் வாயிலாக வழங்கப்படும், 'திருநங்கை அடையாள சான்றிதழ் அல்லது அடையாள அட்டை' இனி அதிகாரப்பூர்வ ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெயர் மற்றும் பாலினத்தை திருத்தம் செய்ய விரும்புவோர், இந்த அடையாள அட்டையை சமர்ப்பித்து மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி மாற்று சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பெயர் மாற்றத்துக்கான அரசிதழில் கொடுக்கப்பட்ட ஆவணம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
பெயரை முழுமையாக மாற்றம் செய்ய விரும்புபவர்கள், அதற்கான அரசிதழ் ஆணையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த புதிய விதியால், திருநங்கையர் தங்களின் அடையாளத்தை இ.பி.எப்.ஓ., பதிவுகளில் மாற்றுவதில் இருந்த சிக்கல்கள் நீக்கப்படும்.

