குடும்பங்களின் சொத்து மதிப்பு 15 சதவீதம் அதிகரிப்பு
குடும்பங்களின் சொத்து மதிப்பு 15 சதவீதம் அதிகரிப்பு
UPDATED : செப் 29, 2025 01:57 AM
ADDED : செப் 29, 2025 01:56 AM

புதுடில்லி:இந்திய குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்தாண்டு, 14.50 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'அலையன்ஸ் குளோபல் வெல்த் ரிப்போர்ட் 2025' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
இதன் முக்கிய விபரங்கள்:
இந்திய குடும்பங்களின் மொத்த நிதி சொத்து மதிப்பு, கடந்தாண்டு 14.50 சதவீதம் அதிகரிப்பு
பணவீக்கத்தை கருத்தில் கொண்ட பின், நிகர நிதி சொத்து மதிப்பு 9.40 சதவீதம் அதிகரிப்பு
இந்திய நடுத்தர பிரிவு குடும்பங்கள், வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன
நிதி சொத்துகள் என்பது பணம் அல்லது எளிதாக பணமாக மாற்றக்கூடிய சொத்துகளான வங்கி டிபாசிட், பங்குகள், மியூச்சுவல் பண்டு, கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை குறிக்கிறது
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் நிகர தனி நபர் நிதி சொத்துகளின் மதிப்பு 13 மடங்கு உயர்வு
இதே காலத்தில், சீனா 12 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குடும்பங்களின் கடன் 41 சதவீதமாக உள்ளது. கடந்த 2014ல் 33 சதவீதமாக இருந்தது
கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்தியர்களின் வாங்கும் திறன் 40 சதவீதம் அதிகரிப்பு