தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : ஆக 31, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 02:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்பு: என்ன நியுட்ரன் செளக்கியமா?

நியுட்ரன்: ஏன் கேட்க மாட்டீங்க? கொஞ்ச நாளா என் பிழைப்பு அப்படித்தான் இருக்குது. திடீருன்னு இறங்குதாம், ஏறுதாமுன்னு இருக்குறதால என்னை இப்படி காலாய்க்கிறீங்க.

டவுனு: அனுபவஸ்தரையே மிரளவைக்குதே. அதுதாங்க சந்தை.



நியுட்ரன்: இப்படியே போனா எனக்கு வேலையே இல்லாத மாதிரி ஆயிடும்.



அப்பு: பயப்படாதீங்க. எல்லாம் சரியாயிடும்.

நியுட்ரன்: நம்பிக்கைதானே வாழ்க்கைங்கிறீங்க.

டவுனு: போன வாரம் மூன்று நாள் இறங்கி, இரண்டு நாள் ஏறி, வார இறுதியில வாராந்திர ரீதியா 76 புள்ளிகள் இறக்கத்தோட முடிஞ்சுது. இந்த இறக்க அளவை ஐந்து நாள் சராசரியாக்கினா ஒரு நாளைக்கு 15 புள்ளிகள்தான் இறங்கியிருக்கு. இப்படிப்பார்த்தா சந்தை நியுட்ரன் கையிலதான் போன வாரம் இருந்திருக்குன்னு சொல்லலாமுல்ல?

நியுட்ரன்: ஏன் இதோட நிறுத்தீட்டிங்க. ஆகஸ்ட் 2025-ல நிப்டி 24,337-ங்குற குறைந்த பட்ச அளவில் இருந்துச்சு. இந்த ஆகஸ்ட்டுல 24,175-ல இருக்குது. அதனால பன்னிரண்டு மாசமா சந்தை நியுட்ரன் கையிலதான் இருக்குதுன்னு சொல்வீங்க போல. ஏங்க, இப்படியெல்லாம் கணக்கு பார்த்து ஆறுதல் வேணா அடையலாம். வியாபாரம் பண்ணவே முடியலை. இதை எங்க போய் சொல்றது?



டவுனு: வர்ற வாரத்துல 'ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், ஹெ.எஸ்.பி.சி., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., கரண்ட் அக்கவுண்ட், ஹெச்.எஸ்.பி.சி., சர்வீசஸ் பி.எம்.ஐ., அன்னிய செலாவணி கையிருப்பு' போன்ற நாட்டின் பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

டல்லாஸ் பெட் மேனுபேக்சரிங் இண்டெக்ஸ், எஸ் அண்டு பி., குளோபல் மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., ஐ.எஸ்.எம்., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., ஜே.ஓ.எல்.டீ., ஜாப் ஓப்பனிங்ஸ், ஐ.எஸ்.எம்., சர்விசஸ் பி.எம்.ஐ., அன் எம்ப்ளாயின்மெண்ட் ரேட் போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

நியுட்ரன்: நிப்டிக்கு 24,042/23,909/23,793 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான 'சப்போர்ட்டும்', 24,344/24,512/24,627 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான 'ரெசிஸ்டென்ஸும்' இருக்குது. 24,210-தான் வாராந்திர அளவுல மேலேயா, கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும்.

அப்பு: திருப்புமுனையெல்லாம் நல்லாத்தான் சொல்றீங்க. திரும்பத்தான் மாட்டேங்குது நிப்டி.

நியுட்ரன்: அது உங்க டிப்பார்ட்மெண்ட். என் மேலே பழி போடக்கூடாது.

டவுனு: ஏன் எங்களுக்கு அதுல பங்கு இல்லையா?

நியுட்ரன்: உங்க பங்களிப்பு எக்கச்சக்கமா இருக்கற தனாலதானே திருப்புமுனை வேலை செய்யாமலேயே போயிடுது.

அப்பு: இப்போ சொன்னீங்களே இது வாஸ்தவமான பேச்சு.

நியுட்ரன்: வர்ற வாரம் எப்படியிருக்கும்னு சொல்லுங்க அப்பு.

அப்பு: ஏற்றத்துக்குண்டான எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்னு ஏறவிடாம தடுக்குது நியுட்ரன்.

டவுனு: என்னைய நேரடியா சொல்லவேண்டியதுதானே. ஏன் சுத்தி வளைச்சு பேசிக்கிட்டு.

நியுட்ரன்: நம்ம மூன்று பேற தவிர ஏதோ ஒன்னு இருக்கற மாதிரி எனக்கும் ஒரு பீலிங் இருக்குது.

அப்பு: நான் அந்த அர்த்தத்துல சொல்லலீங்க. நிறைய பாசிட்டிவ்வான விஷயங்கள் இருந்தும் தொடர்ந்து ஏற மாட்டேங்குதேன்னு சொன்னேன். நீங்க பாட்டுக்கு கற்பனையை பறக்க விடறீங்களே.

நியுட்ரன்: ஓ! அந்த அர்த்தத்துல சொன்னீங்களா!

அப்பு: நிப்டியை விட்டுட்டு பார்த்தா சந்தையில நிறைய வியாபாரத்துக்கான வாய்ப்பு இருக்கவே செய்யுது.

நியுட்ரன்: அதுவேனா கரெக்ட்தான். ஆனா நிப்டி இறங்குனா மனசுக்குள்ளே பயம் கவ்வீடுதே!

டவுனு: பயத்தை கவ்வீட்டு போய் துாரமா விட்டுட்டு வந்து வியாபாரம் பண்ணுங்க.

நியுட்ரன்: உங்க இராஜ்ஜியம் நடக்கறதால அளவுக்கு மேலே கிண்டலா போகுது.

அப்பு: நியுட்ரன் நீங்க சொல்லுங்க வர்ற வாரம் எப்படி இருக்க வாய்ப்பிருக்கு?

நியுட்ரன்: ஏற்ற இறக்கம் அதிகமா இருக்க வாய்ப்பிருக்கு. குறிப்பா உங்களுக்கு சாதகமா அப்பு.

அப்பு: ஏதோ நல்ல வார்த்தை சொன்னீங்க. உங்க வாக்கு பலிச்சா அடுத்த வாரம் கிராண்டான ஒரு லஞ்சுக்கு போலாம். நான் பொறுப்பு.

டவுனு: நானும் ஜாயின் பண்ணிக்கிடறேன்.

அப்பு: அப்ப எனக்கு செலவு கன்பார்ம்.

டவுனு: ஏன்னா நியுட்ரனோட வாக்கு பலிக்க இந்த வாரம் வாய்ப்பு இருக்குது.

அப்பு: நீங்களே அதை சப்போர்ட் பண்ணீட்டீங்களே. ஆச்சரியம்தான்.

நியுட்ரன்: என் வாக்கு பலிக்க நீங்க ரெண்டு பேரும் ஆசைப்படறதால வாங்க போய் ஏதாவது சாட் ஐட்டம் சாப்பிடலாம். லைட்டா பசிக்குது என்று சொல்ல முவரும் புறப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us