உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 31, 2026 02:32 AM

அ நிறம் | அளவு
'எஸ் .பி.ஐ.,' மற்றும் அதன் துணை நிறுவனமான 'எஸ்.பி.ஐ., கேபிட்டல் மார்கெட்ஸ்' ஆகியவை, என்.எஸ்.இ.,யில் தங்கள் வசம் உள்ள பங்குகளில் 1 சதவீதத்தை விற்க திட்டமிட்டுள்ளன. என்.எஸ்.இ., வெளியிட உள்ள 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ.பி.ஓ., வாயிலாக இந்த பங்கு விற்பனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதில், எஸ்.பி.ஐ., சார்பில் 0.65 சதவீத பங்குகளும், எஸ்.பி.ஐ., கேபிட்டல் மார்கெட்ஸ் சார்பில் 0.35 சதவீத பங்குகளும் விற்கப்பட உள்ளன. தற்போதைய நிலவரப்படி, என்.எஸ்.இ.,யில் எஸ்.பி.ஐ., 3.23 சதவீத பங்குகளையும், எஸ்.பி.ஐ., கேபிட்டல் மார்கெட்ஸ் நிறுவனம் 4.33 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
