தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : செப் 14, 2026 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 02:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்பு: வாங்க நியுட்ரன். ஸ்வீட் எடுத்துக்குங்க.

நியுட்ரன்: என் வாக்கு பலிச்சதால எனக்கு ஸ்வீட் கொடுக்கறீங்களா?

அப்பு: இல்லீங்க. டெல்லியில இருந்து நண்பர் ஒருத்தர் ராஜஸ்தானி ஸ்வீட் வாங்கீட்டு வந்தாரு. சூப்பரா இருக்குது. உங்களோட ஷேர் பண்ணிக்கலாமுன்னு கொண்டு வந்தேன்.

நியுட்ரன்: ஷேர் மார்க்கெட்டை சரியா கணிச்சதால மலாய் கேவர் ஸ்வீட்டை ஷேர் பண்றீங்க!

டவுனு: என்ன காரணமா இருந்தா என்ன. ஸ்வீட் பிரமாதமா இருக்குது. டேஸ்ட் நாக்குல ஒட்டிகிச்சு.

நியுட்ரன்: ஆனாலும் பாருங்க. இறங்குமுன்னு நான் எதிர்பார்த்ததை விட 100 புள்ளிகள் வரை அதிகமா நிப்டி இறங்கிடுச்சு.

அப்பு: ஒப்பீனியன் சொல்ல பயப்படற நீங்களே போனவாரம் அடிச்சு சொன்னீங்களா. நான் உஷாராகி அதுக்கேத்த மாதிரி வியாபாரம் பண்னிட்டேன்.

நியுட்ரன்: வருமானம் அதிகமோ!

டவுனு: அதை எங்கிட்டே கேளுங்க. உங்களால போன வாரம் வியாபாரம் அமோகம்.

நியுட்ரன்: இனி கொஞ்ச நாளைக்கு நான் வாயைத்திறக்கவே மாட்டேன்.

அப்பு: நல்ல முடிவுதான்.



நியுட்ரன்: வர்ற வாரத்துல மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையிலான பணவீக்கம், பணவீக்க விகிதம், வேலையில்லாத நிலைமை, பயணியர் வாகன விற்பனை, பேலன்ஸ் ஆப் டிரேட் எம்3 பணப்புழக்கம், வங்கிகள் வழங்கிய கடன்கள்/ அவற்றில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, அந்நிய செலவாணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது. ரீட்டெயில் சேல்ஸ், அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டிவிகித முடிவுகள், வழங்கப்பட்ட கட்டிட அனுமதிகள், இண்டஸ்ட்ரீயல் ப்ரொடக்ஷன் போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

நியுட்ரன்: நிப்டிக்கு 23,123/22,848/22,596 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 23,782/24,165/24,417 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 23,506தான் வாராந்திர அளவுல மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும்.

அப்பு: இறக்கம் தொடருமா நியுட்ரன்?

நியுட்ரன்: நான்தான் கொஞ்ச நாளைக்கு பேசமாட்டேன்னு சொன்னேல்ல. எப்படி மாத்தி கேள்வி கேட்டாலும் நான் பதிலே சொல்ல மாட்டேன்.

டவுனு: ரொம்ப அலர்ட்டா இருக்கீங்க போல. நீங்க சொல்லுங்க அப்பு. வர்ற வாரம் குறித்த உங்க எதிர்பார்ப்பை சொல்லுங்க.

நியுட்ரன்: ஆமாம் சட்டுபுட்டுன்னு சொல்லுங்க.

அப்பு: டெக்னிக்கலா ஒரு பவுன்ஸ் பேக் எந்த நேரத்திலும் வரலாமுங்கிறதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.

நியுட்ரன்: அப்புறம்.

அப்பு: அப்புறம் என்ன. ஏற்றம் வந்து போகத்தான் வாய்ப்பிருக்குங்கிறதுதான் நிலைமை. ஒருவேளை செய்திகள் ஏதாவது ரொம்ப பாசிட்டிவ்வா வந்துட்டா ஏற்றம் நிலைக்க வாய்ப்பிருக்குது.

டவுனு: பெடரல் ரிசர்வின் வட்டிவிகித முடிவுகள் வேற வெளிவர இருக்குது.

அப்பு: ஆமாம். அதுகேத்த மாதிரி வேற திருப்பங்கள் வரும்.

நியுட்ரன்: திங்கள் கிழமை சந்தைக்கு விடுமுறை. அதனால நான்கு வர்த்தக நாட்கள்தான் இருக்குது.

அப்பு: பேசமாட்டேன்னீங்க.

நியுட்ரன்: இது பொதுத்தகவல். ஒப்பீனியன்தான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.

டவுனு: தற்போதைக்கு 23,120ல முக்கிய சப்போர்ட் இருக்குது அதைத்தாண்டி இறங்கினா 22,500 வரைக்கும் போக வாய்ப்பிருக்குது.

நியுட்ரன்: உங்க எதிர்பார்ப்பை சொல்லுங்க அப்பு.

அப்பு: 23,800ல தான் சொல்லிகிற மாதிரி வலுவான ரெசிஸ்டென்ஸ் இருக்குது. அதனால மெல்ல மெல்லதான் ஏற்றம் நடக்க வாய்ப்பு உள்ளது. தடாலடி ஏற்றத்தையெல்லாம் எதிர்பார்க்க கூடாது.

நியுட்ரன்: செய்திகள் ரொம்ப பாசிட்டிவ்வா இருந்தாலுமா?

அப்பு: 23,800-லதான் ரெசிஸ்டென்ஸ் இருக்குதுங்கறதால ஏற்றம் வந்தாலுமே அப்பப்ப கரெக்ஷன் வந்து வந்துதான் மேலே போக வாய்ப்பிருக்குது.

நியுட்ரன்: இறுதியா என்னதான் சொல்ல வர்றீங்க.

டவுனு: டெக்னிக்கல் பவுன்ஸ் பேக் வரலாம். செய்திகள் பாசிட்டிவா இருந்தாலுமே தொடர் ஏற்றத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

நியுட்ரன்: கொஞ்சம் குழப்பமான சூழல்தான்னு சொல்றீங்க.

அப்பு: அதேதான் என்னோட எதிர்பார்ப்பும். சூப்பர் டேஸ்ட்டுல ராஜஸ்தானி ஸ்வீட் கொடுத்தீங்க. காரமும் ஸ்ட்ராங்கான காபியும் சாப்பிடலாம் நடங்க என்று சொல்ல மூவரும் கடையை நோக்கி நடந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us