தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்? 'சந்தையில் பலவீனம் தொடரவே வாய்ப்பு இருக்கிறது'

 இந்த வாரம் எப்படி இருக்கும்? 'சந்தையில் பலவீனம் தொடரவே வாய்ப்பு இருக்கிறது'

 இந்த வாரம் எப்படி இருக்கும்? 'சந்தையில் பலவீனம் தொடரவே வாய்ப்பு இருக்கிறது'


ADDED : செப் 28, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 02:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்பு: வணக்கம் நியுட்ரன். நிப்டி வீக்னெஸில இருந்து முழுமையா வெளிய வரலேன்னு சொல்லீட்டு போனிங்க. அது உண்மைன்னு நிருபண மாயிடுச்சே.

நியுட்ரன்: எச்சரிக்கையா இருக்கறதுக்காக சொன்னேன்.

அப்பு: உங்களால நான் தப்பிச்சேன். புதன் கிழமை ஏறுனதை பார்த்தப்புறம் நான் கொஞ்சம் டெம்ப்ட் ஆனேன். ஆனா நியுட்ரனே அழுத்தம் திருத்தமா சொல்லியிருக்காரு. அதனால வேடிக்கை மட்டும் பார்ப்போமுன்னு அமைதியா இருந்துட்டேன்.

டவுனு: நீங்களும் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாச்சா. சேர்க்கை சரியில்லை. வியாழக்கிழமை எங்க ஆட்டத்த பார்த்தீங்கல்ல!

நியுட்ரன்: காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையால்ல இருக்குது.

அப்பு: அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. எதனால இறங்குனாலும் அது டவுனோட பராக்கிரமத்தால நடந்துச்சுன்னுதான் வச்சுக்கணும்.

நியுட்ரன்: வர்ற வார்த்துல இண்டஸ்ட்ரீயல் ப்ரொடக்ஷன், மேனுபேக்சரிங் ப்ரொடக்ஷன், ஹெச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, வங்கிகள் வழங்கிய கடனின் அளவு மற்றும் அவற்றில் இருக்கிற வைப்புநிதியின் அளவு போன்றவற்றில் வளர்ச்சி, அன்னிய செலவாணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது.

ஜே.ஓ.எல்.டீ., ஜாப் ஓப்பனிங்ஸ், சிபி கன்ஸ்யுமர் கான்பிடன்ஸ், கோர் பி.சி.இ., ப்ரைஸ் இண்டெக்ஸ், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், தனிநபர் வருமானம் மற்றும் செலவுகள், ஐ.எஸ்.எம்., மேனுபேக்சரிங் இண்டெக்ஸ், நான் பார்ம் பே ரோல்ஸ், அன்எம்ளாயின்மென்ட் ரேட், பேக்டரி ஆர்டர்கள் போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்கின்றன.

டவுனு: செப்டம்பர் மாத எப்&ஓ எக்ஸ்பைரி வரும் வாரத்தில நடக்க இருக்குது. வெள்ளிக்கிழமை சந்தை விடுமுறையும் இருக்குது.

நியுட்ரன்: நிப்டிக்கு 22,945/22,749/22,570 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 23,413/23,685/23,864 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 23,217தான் வாராந்திர அளவுல மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும்.

அப்பு: வர்ற வாரம் எப்படியிருக்கும் நியுட்ரன்?

நியுட்ரன்: போன வெள்ளிக்கிழமை வந்த ஏற்றம் குறுகிய கால அடிப்படையில் நிப்டி கொஞ்சம் நிதானிச்சிருக்குங்கறதை மட்டும்தான் காட்டுது. 22 நாள் அளவில பார்த்தா நிப்டியில இருக்குற 50 ஸ்டாக்குகளில 41 ஸ்டாக்குகள் இறக்கத்தை சந்திச்சிருக்கு. ஆனா, ஐந்து நாள் அளவீட்டில பார்த்தா 19 ஸ்டாக்குகள் ஏற்றத்தை சந்திச்சிருக்குது. இதுல கடந்த 22 நாளில் நிப்டியில் இறக்கத்தை சந்திச்ச 41 ஸ்டாக்குகளில 13ம் அடங்கும். இதுல இருந்து என்ன தெரியுது? தொடர்ந்து ஏற்றத்தை வெகு சில ஸ்டாக்குகளே சந்திக்குது. தவிர ஒரு சில ஸ்டாக்குகள்தான் இறக்கத்தில இருந்து மீள ஆரம்பிச்சிருக்கு. நிப்டியில இருக்கற ஒட்டுமொத்த ஸ்டாக்குகளும் ஏற்றத்தை சந்திக்கலைங்குறதுதான்.

டவுனு: போனவாரமும் இதைத்தான் சொன்னீங்க. இந்த வாரம் கொஞ்சம் மாத்தி சொல்றீங்க. அவ்வளவுதான்.

நியுட்ரன்: ஏங்க நான் என்னா கதையா சொல்றேன். நடந்த விஷயங்களை கூட்டி கழிச்சு கணக்கு பார்த்து சொல்றேன். என்னமோ ஒரே கதையை உல்டா பண்ணி சொல்றேன்கிற மாதிரி சொல்றீங்களே..

அப்பு: கோபப்படாதீங்க நியுட்ரன். இருக்கற நிலைமையை சொல்றீங்க. அவ்வளவுதான். அதுதான் கரெக்ட்டும் கூட. வரவர உங்க அனாலிசிஸ் ரொம்ப டீப்பா போகுது நியுட்ரன்.

நியுட்ரன்: புரிஞ்சா சரி. டவுனு என்ன சொல்வாரு. வேலை வெட்டியில்லை. அதனால அனாலிசிஸ் பண்றதுதானே வேலைன்னு கிண்டலடிப்பாரு.

அப்பு: லார்ஜ் கேப் மற்றும் மிட்கேப் இண்டெக்ஸை விட ஸ்மால் கேப் இண்டெக்ஸ் கொஞ்சம் பெட்டரா பெர்பார்ம் பண்ணியிருக்கு.

டவுனு: நிப்டி இறங்கறப்ப கூட இது நடந்துருக்கு.

அப்பு: உங்களுக்குத்தான் எது ஏற்றம் கண்டாலும் பிடிக்காதே.

நியுட்ரன்: பேருக்கேத்த ஆசை இருக்கத்தானே செய்யும்.

டவுனு: சரி அனாலிசிஸெல்லாம் போதும். வர்ற வாரம் எப்படி இருக்கும்..

நியுட்ரன்: வீக்னெஸ் தொடரத்தான் வாய்ப்பிருக்கு.

டவுனு: எப்&ஓ எக்ஸ்பைரிய தாண்டியுமா?.

அப்பு: சபாஷ். சரியான கேள்வி.

நியுட்ரன்: நீண்ட வார இறுதி விடுமுறை இருக்கறதால எப்&ஓ எக்ஸ்பைரிக்கு அப்புறம் பெரிய மாற்றம் வர்றதுக்கு வாய்ப்பு குறைவா இருக்கலாம் என்பதுதான் என்னோட கணிப்பு.

அப்பு: என் கணிப்பு வேற மாதிரி இருக்குது.

நியுட்ரன்: சொல்லுங்க கேட்போம்.

அப்பு: எப்&ஓ எக்ஸ்பைரி வரைக்கும் ஏற்றம் வரதுக்கு வாய்ப்பிருக்கு. அதுக்கப்புறம் நிலைமை மாறலாம்.

டவுனு: ஆசைய அளவா பட்டா அவங்கவங்களுக்கு நல்லது.

நியுட்ரன்: கோபப்படாதீங்க டவுனு. அவரோட கணிப்பை அவர் சொல்றாரு.

டவுனு: போன வாரம் வீட்டுமனை போய் பார்த்தோமே ஏதும் தகவல் உண்டா?.

அப்பு: அட நீங்க வேற. லே-அவுட் வரைபடத்தை அனுப்பறேன்னு சொன்ன ப்ரொமோட்டர் இன்னைக்கு வரைக்கும் அனுப்பலை. போன் போட்டா எடுக்கவும் மாட்டேங்குறார்.

நியுட்ரன்: சரிவிடுங்க. நமக்குன்னு இருந்தா நிச்சயம் அது நம்மை வந்து சேரும். தலை வலிக்கிற மாதிரி இருக்கு. ஒரு ஸ்ட்ராங் டீ சாப்பிட்டுட்டு புறப்படலாம் என்று சொல்ல மூவரும் டீ ஷாப்பை நோக்கை நடந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us