உள்ளடக்கத்திற்கு செல்ல
உலகளாவிய பங்கு சந்தைகளில் 11% வளர்ச்சியுடன் இந்தியா முன்னிலை
உலகளாவிய பங்கு சந்தைகளில் 11% வளர்ச்சியுடன் இந்தியா முன்னிலை
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:38 PM
அ நிறம் | அளவு
கடந்த சில மாதங்களாக மந்தமான செயல்பாடு, அன்னிய முதலீடுகளின் வெளியேற்றம் மற்றும் புதிய ‘குளோசிங் ஆக்ஷன்’ நடைமுறையால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிறகு, இந்திய பங்கு சந்தைகள் நவம்பர் மாதத்தில் வலுவான மீட்சியை பதிவு செய்துள்ளன.
நவம்பரில் 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, உலகளாவிய முக்கிய பங்கு சந்தை குறியீடுகளில் மிகப்பெரிய எழுச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது. இருப்பினும், சந்தையின் இந்த வேகமான ஏற்றத்திற்கு பின்னால், ‘டெரிவேட்டிவ்ஸ்’ எனப்படும் ‘பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்’ வர்த்தகர்களிடையே எச்சரிக்கை உணர்வும், ‘ஹெட்ஜிங்’ நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதை சந்தை தரவுகள் காட்டுகின்றன.
