ஆர்.இ.ஐ.டி.எஸ்., வருவாய் உலகளவில் இந்தியா முன்னிலை
ஆர்.இ.ஐ.டி.எஸ்., வருவாய் உலகளவில் இந்தியா முன்னிலை
ADDED : செப் 14, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உ லகளவில், இந்தியாவின் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை சந்தை தான் அதிக வருவாய் ஈட்டித் தருவதாக, 'அனராக்' நிறுவனம் மற்றும் 'கிரெடாய்' அமைப்பின் கூட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தை 6 முதல் 7 சதவீத வருவாய் ஈட்டித் தரும் நிலையில், வளர்ந்த சந்தைகளான அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகியவை இதை விட குறைவாகவே வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல், இந்தியாவின் முதல் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை பட்டியலிடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்திய ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளையின் சந்தை மதிப்பு 1.58 லட்சம் கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 2030க்குள், இது 2.20 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.