அதிக வட்டி தரும் திட்டங்களில் 'ரிஸ்க்' எடுக்கும் இந்தியர்கள்
அதிக வட்டி தரும் திட்டங்களில் 'ரிஸ்க்' எடுக்கும் இந்தியர்கள்
ADDED : ஜன 02, 2026 01:55 AM

இந்திய குடும்பங்கள், வழக்கமான வங்கி வைப்புத்தொகை, ஆயுள் காப்பீடு மற்றும் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதை குறைத்துவிட்டு, அதிக லாபம் தரும் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டுகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பியுள்ளதாக, ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் குடும்பங்களின் மொத்த சேமிப்பில் வங்கிகளின் பங்கு 40.90 சதவீதத்திலிருந்து 35.20 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரம், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு 2.10 சதவீதத்திலிருந்து 13.10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மாற்றத்துக்கு காரணம்?
* 2022 - 2024ம் ஆண்டு இறுதி வரை பங்குச்சந்தை தொடர் ஏற்றத்தால், மக்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர்
* ரிஸ்க் இருந்தாலும் அதிக வருமானம் தரும் திட்டங்களை இளைஞர்கள் அதிகம் விரும்புவது
* பி.எப்., மற்றும் பென்ஷன் பண்டுகள் 10.17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. இது ஓய்வுகால திட்டமிடல் குறித்த விழிப்புணர்வைக் காட்டுகிறது.

