நிறுவன முதலீட்டாளர்களுக்கு கமாடிட்டி சந்தையில் அனுமதி
நிறுவன முதலீட்டாளர்களுக்கு கமாடிட்டி சந்தையில் அனுமதி
ADDED : அக் 18, 2025 12:13 AM

வேளாண் மற்றும் வேளாண் அல்லாத பொருட்களுக்கான கமாடிட்டி சந்தையில், நிறுவன முதலீட்டாளர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக, 'செபி' தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது:
வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிறுவனங்கள், வேளாண் அல்லாத பொருட்கள் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிப்பது தொடர்பாக, கடந்த மாதம் அரசிடம் ஆலோசித்தோம்.
மேலும், ரொக்கம் அல்லாத வர்த்தகம், வேளாண் அல்லாத பொருட்கள் சந்தையில், ஒப்பந்தங்கள் வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்களை அனுமதிப்பது தொடர்பாகவும் முன்மொழிந்து உள்ளோம்.
நிறுவன முதலீட்டாளர்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக, கமாடிட்டி சந்தையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள், ஆலோசனை அடிப்படையில், கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர, கார்ப்பரேட் பத்திரங்கள் சந்தையை வலுப்படுத்தும் வகையில் வெளியிடும் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் சந்தையை எளிதாக அணுக தேவையான நடவடிக்கைகளையும் செபி எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.