sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

இன்சூரன்ஸ்: பாலிசி 'லேப்ஸ்' ஆகாமல் பாதுகாப்பது எப்படி?

/

இன்சூரன்ஸ்: பாலிசி 'லேப்ஸ்' ஆகாமல் பாதுகாப்பது எப்படி?

இன்சூரன்ஸ்: பாலிசி 'லேப்ஸ்' ஆகாமல் பாதுகாப்பது எப்படி?

இன்சூரன்ஸ்: பாலிசி 'லேப்ஸ்' ஆகாமல் பாதுகாப்பது எப்படி?


UPDATED : அக் 19, 2025 07:55 PM

ADDED : அக் 19, 2025 07:54 PM

Google News

UPDATED : அக் 19, 2025 07:55 PM ADDED : அக் 19, 2025 07:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரீமியம் செலுத்தும் தேதியை மறந்தால், உங்கள் பாலிசி 'லேப்ஸ்' ஆகி, பல வருட சேமிப்பும், காப்பும் ஒரே நேரத்தில் நஷ்டமாகலாம். இதைத் தவிர்க்க எளிய வழிகள் உள்ளன.

Image 1483896

பிரீமியம் செலுத்த மறந்துவிட்டீர்களா?


மின்சாரக் கட்டணத்தை நேரத்துக்கு செலுத்தவில்லை என்றால், முதலில் இரண்டு மூன்று எச்சரிக்கைகள் வரும். அதன் பிறகு, இணைப்பு துண்டிக்கப்படும்.

அதேபோல், ஆயுள் காப்பீடு பாலிசியும் உரிய கால அவகாசத்துக்குள் செலுத்தாவிட்டால் நிறுத்தப்படும். பெரும்பாலான காப்பீடு பாலிசிகளில் ஆண்டு, காலாண்டு அல்லது மாதந்தோறும் ஒரு பிரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்கும். பாலிசி வாங்கும் போதே தொகையும், தேதியும் குறிப்பிடப்படும்.

நேரத்துக்கு பிரீமியம் செலுத்தவில்லை என்றால், பாலிசியின் காப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும். காப்பீட்டு நிறுவனம், உங்கள் ஏஜென்ட் அல்லது புரோக்கர் நினைவூட்டுவார்கள். சில சமயம் 30 நாட்கள் வரை 'கிரேஸ் பீரியட்' கிடைக்கும்.

அதற்குப் பிறகும் பணம் செலுத்தாவிட்டால், பாலிசி லேப்ஸ் ஆகிவிடும். இதன் காரணமாக உங்கள் மறைவுக்குப் பிறகு குடும்பத்தாருக்கு எந்தவித காப்புத் தொகையும் கிடையாது. மெச்சூரிட்டி தொகை, மணிபேக், போனஸ் உள்ளிட்ட நன்மைகளையும் இழக்க நேரிடும். ஏற்கனவே பல ஆண்டுகளாக செலுத்திய பிரீமியம் தொகையும் வீணாகும்.

பிரீமியம் தவறுவது பல காரணங்களால் ஏற்படலாம் — மறந்து போனது, முகவரி மாறியது, வேலை இழப்பு, மருத்துவ அவசரம் போன்றவை. யாரும் திட்டமிட்டு தவறவிடுவதில்லை; ஆனால் நடந்தால் உடனே சரிசெய்ய வேண்டும்.

பாலிசியை உயிர்ப்பிக்கலாம்


முதலில் செய்ய வேண்டியது, பாலிசியை உயிர்ப்பிக்க முயற்சிப்பதே. உங்கள் ஏஜென்ட் அல்லது காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு 'ரிவைவல் கோட்' கேளுங்கள்.

பொதுவாக நிலுவையில் உள்ள பிரீமியம் தொகை அத்துடன் சிறிய அபராதம் மற்றும் சில நேரங்களில் புதிய மருத்துவ பரிசோதனை ஆகியவை தேவைப்படும்.



இதை ஏற்று, பாலிசியை மீண்டும் உயிர்ப்பிப்பது புத்திசாலித்தனமான முடிவு. பழையதை விட்டுவிட்டு, புதிய பாலிசி வாங்குவது நஷ்டமே. ஏனெனில் புதிய பாலிசிக்கு பிரீமியம் அதிகமாகும் (வயது காரணமாக). சில சமயம் புதிய பாலிசி மறுக்கப்படவும் செய்யலாம். பாலிசியை உயிர்பிப்பதற்கான முகாம்கள் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பாலிசி வாங்கும் போது கவனிக்க வேண்டியவை


பாலிசி உயிர்ப்பிப்பது ஒரு வழி தான். ஆனால் அதைவிட முக்கியமானது, பாலிசி லாப்ஸ் ஆகாமல் தடுப்பது. சிறிய விழிப்புணர்வு, திட்டமிடல் இருந்தாலே போதும்.

அவை குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்...






      Dinamalar
      Follow us