sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

இன்சூரன்ஸ்: 'நிச்சயம் எது? வாழ்க்கையா, காப்பீடா?'

/

இன்சூரன்ஸ்: 'நிச்சயம் எது? வாழ்க்கையா, காப்பீடா?'

இன்சூரன்ஸ்: 'நிச்சயம் எது? வாழ்க்கையா, காப்பீடா?'

இன்சூரன்ஸ்: 'நிச்சயம் எது? வாழ்க்கையா, காப்பீடா?'


ADDED : நவ 02, 2025 10:58 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காப்பீடு என்பது மர்மமானது, கடினமானது, சோகமானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் காப்பீடு அவசிய மாகவும், பயனுள்ளதாகவு ம், சில சமயங்களில் கட்டாயமாகவும் இருக்கிறது.

நிழலும், நிஜமும்


இந்த, 'நிழலும், நிஜமும்' என்ற பத்தியில் காப்பீடு குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகள், குழப்பங்கள், தவறான புரிதல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, சரியான அணுகுமுறைகளை விளக்கப் போகிறோம். காப்பீட்டை எவ்வாறு வாங்குவது, அதை எவ்வாறு பராமரிப்பது மற்றும் கோரிக்கை செய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கப் போகிறோம்.

ஆயுள் காப்பீடு பற்றிய சில பொதுவான தவறான கருத்துகளைப் பார்ப்போம். அவை நிழலா? நிஜமா?

நம்பிக்கை 1: நான் இளைஞன்; திருமணம் ஆகவில்லை. உடல் நலம் நன்றாக உள்ளது. எனவே எனக்கு ஆயுள் காப்பீடு தேவையில்லை.

இது ஒரு நிழல்

ஆயுள் காப்பீடு என்பது, நீங்கள் இல்லாதபோது உங்கள் குடும்பத்தாரின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காகவே. 'என்னை சார்ந்தவர் தற்போது யாரும் இல்லை; எனவே, ஏன் காப்பீடு வாங்க வேண்டும்?' என்று சிலர் கேட்பது இயல்பானதே. மேலும், இளம் வயதில் ஆரோக்கியமாக இருப்பதால், வாழ்க்கை முடிவில்லாததாக தோன்றும்.

ஆனால், ஒரு பழமொழி உண்டு. 'டில்லி துார் ஆஸ்த்' அதாவது டில்லி தொலைவில் உள்ளது போல், எதிர்கால அபாயங்கள் துாரத்தில் இருப்பதாக தோன்றினா லும், வாழ்க்கை நிச்சயமற்றது; மரணம் எப்போதும் அருகில்தான்.

இளமையாகவும், திருமணம் ஆகாதவராகவும் இருந்தாலும் ஆயுள் காப்பீடு வாங்குவதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன.

 இளம் வயதில் காப்பீடு வாங்கும் போது பிரீமியம் குறைவாக இருக்கும். உடல்நலக் குறைவுக்கு கூடுதல் பிரீமியம், மருத்துவ சோதனை போன்றவை தேவையில்லை

 வருமானம் அதிக ரிக்கும் போதும், குடும்ப பொறுப்புகள் வரும் போதும், காப்பீடு தொகையை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும்

 சில வகை ஆயுள் காப்பீடு திட்டங்கள் ஒரு சொத்தை உருவாக்குவது போல, சில பாலிசிகளில் கடன் பெறவும் முடியும். வீட்டுக் கடன்கள் போன்ற சில கடன்களுக்கு நீங்கள் இதை ஒரு பினையமாக பயன்படுத்தலாம்.

 நீங்கள் இளம் வயதில் இறந்தால், மாணவர் கடன் அல்லது பிற கடன்களை இந்த பாலிசி க்ளைம் மூலம் உங்கள் குடும்பத்தினர் திருப்பிச் செலுத்தலாம்

 உங்கள் இறுதி சடங்கு செலவுகளுக்கோ, உங்கள் சகோதர, சகோதரிகளின் கல்விக்கோ அல்லது நன்கொடைக்கோ பயன்படுத்தலாம்.

நம்பிக்கை 2: நான் வயதானவன்; எனக்கு ஆயுள் காப்பீடு கிடைக்காது.

கொஞ்சம் நிழல், கொஞ்சம் நிஜம்

வயதானவர்களுக்கும் சில வகை ஆயுள் காப்பீடு திட்டங்கள் கிடைக்கும். உடல்நலம் போன்ற காரணங்களால், பிரீமியம் அதிகமாகலாம். சில நேரங்களில் காப்பீடு நிறுவனம் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்.

ஆனால், இதற்காக தயங்க வேண்டாம். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு உருவாக்க விரும்பினால், சில நிறுவனங்களுடன் பேசி தீர்வு காண்பது நல்லது.

நம்பிக்கை 3:

ஆயுள் காப்பீட்டின் பயன், நான் இறந்த பின் தான். இதனால், எனக்கு எதுவும் கிடையாது.

இது ஒரு நிழல்

ஆயுள் காப்பீடு வாங்குவது என்பது, குடும்பப் பொறுப்பை நிறைவேற்றுகிறோம் என்ற மனநிம்மதியை அளிக்கிறது. அதற்கு மேலாக, மணி பேக், எண்டோவ்மென்ட், ரிட்டர்ன் ஆப் பிரீமியம் போன்ற திட்டங்கள் உங்களுக்கு திட்டமிட்ட வருமானத்தை வழங்கும்.

இதன் வாயிலாக வீடு வாங்க முதலீடு, குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது ஓய்வுகால நிதி போன்றவற்றை முன்னோக்கி திட்டமிடலாம்.

இன்றைய வரி விதிகளில், ஆயுள் காப்பீடு வாங்குவதற்கு சில வரிச்சலுகைகளும் உள்ளன. மேலும், ஆயுள் காப்பீட்டின் மெச்சூரிட்டி தொகைக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரி விலக்கு கிடைக்கும். மரண க்ளைம் தொகை, முழு வரி விலக்கு பெற்றதே.

க.நித்ய கல்யாணி

காப்பீடு குறித்த நிபுணத்துவ

எழுத்தாளர், பெருநிறுவன

வரலாற்றாசிரியர்






      Dinamalar
      Follow us