தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஈக்விட்டியில் குறைத்து டெப்ட் பிரிவில் முதலீடு ஜூலை மாத 'ஆம்பி' தரவுகள்

 ஈக்விட்டியில் குறைத்து டெப்ட் பிரிவில் முதலீடு ஜூலை மாத 'ஆம்பி' தரவுகள்

 ஈக்விட்டியில் குறைத்து டெப்ட் பிரிவில் முதலீடு ஜூலை மாத 'ஆம்பி' தரவுகள்


UPDATED : ஆக 12, 2026 03:33 AM

ADDED : ஆக 12, 2026 03:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 03:33 AM ADDED : ஆக 12, 2026 03:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆ ம்பி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் பங்குச்சந்தை சார்ந்த 'ஈக்விட்டி' மியூச்சுவல் பண்டு திட்டங்களில் நிகர முதலீடு 15 சதவீதம் குறைந்து 24,697 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. எனினும், கடன் சார்ந்த திட்டங்களில் அதிக அளவு முதலீடு ஈர்க்கப்பட்டதன் வாயிலாக ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு துறை மீட்சி கண்டுள்ளது. தரவுகளின்படி, ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு துறையின் நிகர முதலீடு 2.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது . ஈக்விட்டி பிரிவில் முதலீடு குறைந்திருந்தாலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

Image 1608034


3 ஆண்டுகளில் முதல்முறை
மியூச்சுவல் பண்டு துறையில் முன்னணி பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் 'லார்ஜ் கேப்' பண்டுகளில் இருந்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நிதி வெளியேறியுள்ளது. 2026 ஜூலை மாத தரவுகளின்படி, லார்ஜ்கேப் திட்டங்களில் இருந்து 1,321.69 கோடி ரூபாய் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதத்தில் 2,067.48 கோடி ரூபாய் புதிய முதலீடு வந்திருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அது சரிவை சந்தித்துள்ளது. லார்ஜ்கேப் பங்குகளின் விலை உச்சத்தை எட்டிய நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை வெளியே எடுக்க தொடங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், லார்ஜ்கேப் பண்டுகளில் இருந்து வெளியேறிய முதலீட்டாளர்களின் கவனம், அதிக வருவாய் அளிக்கும் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் திட்டங்களை நோக்கி மாறியுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us